மேலும் அறிய
மூடப்பட்டது திண்டுக்கல் மலைக்கோட்டை: தொல்லியல் துறை உத்தரவு அமல்
திண்டுக்கல்லில் கொரோனா பரவலால் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான சின்னமான மலைக்கோட்டை மூடப்பட்டது.

dindigul-fort
தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தொற்று தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இந்தியா முழுவதும் உள்ள தொல்லியல் துறை புராதன சின்னங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். ஆனால் இன்று 16.04.21 முதல் மே மாதம் 15 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பதாகைகள் வைக்கப்பட்டு மலைக்கோட்டையின் அடிவாரத்திலுள்ள கதவுகள் மூடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















