மேட்டூர் அணையில் அதிகரித்து வரும் நீர்மட்டம்
மேட்டூர் அணையில் வினாடிக்கு 34 ஆயிரத்து 144 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, 29 ஆயிரத்து 666 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.16 அடியாக உள்ளது, இது நேற்றை விட 2 அடி அதிகமாகும், வினாடிக்கு 34 ஆயிரத்தி 144 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து 29 ஆயிரத்து 666 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 41.12 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு ஒளியியல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரியில் உபரி நீர் வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் கடந்த 24 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று கிருஷ்ண சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ண சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரத்து 141 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 29 ஆயிரத்து 666 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் அணையிலிருந்து வினாடிக்கு 34 ஆயிரத்து கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் தற்போது அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 39.44 டி.எம்.சி ஆக அதிகரித்துள்ளது. அணையின் நீர்வரத்து 34 ஆயிரத்து 141 கன அடியிலிருந்து 29 ஆயிரத்து 666 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மழை அதிகரிக்கும் அச்சத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 கன அடி எட்டும். அதன் பிறகு மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறக்கப்படும். மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும்.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.