டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
சேலம் ஆத்தூரில் கணவர் டிவியில் பிடித்த பாடலை போடாத காரணத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

சேலத்தில் டிவியில் பிடித்த பாடலை போடாததால் கணவரிடம் ஏற்பட்ட சண்டையில் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக சின்ன சின்ன பிரச்னைக்கு எல்லாம் கொலை, தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கணவன், மனைவிக்கு ஏற்படும் சின்ன சண்டையால் தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்பட செய்துள்ளது. அட.. இந்த விஷயத்துக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வதா? என்று சொல்லுமளவிற்கு தற்கொலைகள் அதிகமாகி வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஒரு சின்ன சண்டையால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கணவரிடம் ஏற்பட்ட தகராறில் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர்கள் கணவர் அஜித் குமார், மனைவி புவனேஸ்வரி தம்பதி. நேற்று மதியம் இவர்களுக்கு இடையே டிவியில் பாடல் போடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு தற்கொலையில் முடிந்துள்ளது. கணவர் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது, தனக்குப் பிடித்த பாடலை வைக்குமாறு மனைவி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி சமையல் அறைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. திருமணமாகி 6 ஆண்டுகளே ஆனதால், இந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு ஆத்தூர் டவுன் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
டிவியில் பிடித்த பாடலை போடாததால் கணவரிடம் ஏற்பட்ட சண்டையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆத்தூரில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















