Actor Sathyaraj : ”நாங்கள் நிழல் ஹீரோக்கள்..ரியல் ஹீரோ யாரு தெரியுமா?” வெளிப்படையாக சொன்ன சத்யராஜ்
Actor Sathyaraj : மனிதநேயத்திற்காகவும், மனித விடுதலைக்காகவும் பயன்படாவிட்டால், நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருந்து ஒரு பயனும் இல்லை என்று நடிகரும், பெரியாரிய ஆதரவாளருமான சத்யராஜ் பேசியுள்ளார்.

Actor Sathyaraj : மனிதநேயத்திற்காகவும், மனித விடுதலைக்காகவும் பயன்படாவிட்டால், நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருந்து ஒரு பயனும் இல்லை என்று நடிகரும், பெரியாரிய ஆதரவாளருமான சத்யராஜ் பேசியுள்ளார்.
போரை நிறுத்துங்க:
காசா மீதான போரை நிறுத்தக்கோரி சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது. இதில் நடிகரும், பெரியாரிய ஆதரவாளருமான சத்யராஜ் கலந்த் கொண்டார். அப்போது அவர் பேசிகையில், “. காசாவில் நடந்துகொண்டிருக்கும் படுகொலை என்பது சகித்துக்கொள்ள முடியாதது. மனிதாபிமானம் இல்லாமல் எப்படி காசாவில் குண்டு போட முடிகிறது. காசாவில் ஒரு தாக்குதலை நடத்திவிட்டு எப்படி அவர்களால் நிம்மதியாக தூங்க முடியும். குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் பாதியிலேயே அப்படியே நின்று விட்டார்கள். அதனால் தான் அந்த புத்தி இருக்கிறது.
இதை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ஐநா சபை முடிவு எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இன விடுதலைக்காக போராடும் போதும் இப்படித்தான் இனப்படுகொலை நடக்கிறது. இலங்கையில் இப்படித்தான் தமிழீழம் மலர வேண்டும் என்று போராடிய நமது தமிழீழ சகோதரர்கள் கொடுரமாக கொல்லப்பட்டார்கள். போராளிகள் மட்டும் அல்ல அப்பாவிகளும் கொல்லாப்பட்டார்கள்.அப்படித்தான் இன்று போர் என்ற பெயரில் மொத்த இன த்தையும் அழிப்பதற்கு இஸ்ரேல் திட்டைமிட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு அமெரிக்கா துணை போயிகொண்டிருக்கிறது. சென்னையில் ஒரு கூட்டம் நடத்தினால் அந்த போர் உடனே நின்று விடுமா என்று எல்லோரும் நினைக்கலாம். நிற்கும். ஏனென்றால் இன்று இருக்கும் சமூக வலைதளங்களில் இது உலகம் முழுவதும் சென்று சேர்ந்து விடும்.
நாங்கள் நிழல் ஹீரோக்கள்:
இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்வது என்பது என்னைப் போன்ற கலைஞர்களின் கடமை.இது போன்ற மனித நேயத்திற்காகவும், மனித விடுதலைக்காகவும் பயன்படாமல் இருந்தால் நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருந்து எதற்கும் பயன் இல்லை”என்று ஆவேசமாக பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய சத்யராஜ், “ இந்த மேடையில் அமர்ந்திருக்கும் திருமாவளவன், திருமுருகன் காந்தி போன்றோர் தான் ரியல் ஹீரோக்கள் நாங்கள் எல்லால் நிழல் ஹீரோக்கள் தான். எனவே உலகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக அனைத்து மக்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று என்பது எனது வேண்டுகோள். இது இஸ்லாமியார்களுக்கு ஆதரவாக நடக்கும் கூட்டம் அல்ல மனித நேயத்திற்காக நடக்கும் கூட்டம்”என்று பேசினார் சத்யராஜ்.





















