மேலும் அறிய

’அதிமுக கூட்டத்தில் எழுந்த ஒற்றைத் தலைமை முழக்கம்’ கட்சியை தன்வசப்படுத்தும் எடப்பாடி பழனிசாமி, தனித்துவிடப்படும் ஒபிஎஸ்..! – பரபரப்பு தகவல்கள்

’கையெழுத்துபோடும் உரிமை ஒபிஎஸ்சிடம் இருப்பதால், அவரை ஓரங்கட்டி, அவமானப்படுத்தி கட்சியை விட்டே காலிச் செய்யும் வேலைகள் தொடங்கிவிட்டதாக தெரிகிறது’

வரும் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு / செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசிக்க ஒபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டப்பட்டது.

மாவட்ட் செயலாளர்கள் கூட்டத்தில் ஒபிஎஸ் - ஈபிஎஸ்
மாவட்ட் செயலாளர்கள் கூட்டத்தில் ஒபிஎஸ் - ஈபிஎஸ்

ஒற்றைத் தலைமை முழக்கம் – கொளுத்திப் போட்ட மாதவரம் மூர்த்தி

பொதுக்குழு தொடர்பாகவும் அதில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் பற்றியும் விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில், அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுப்பப்பட்டதும் அரங்கம் பரபரப்பானது. முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி எழுந்து, அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதனை இடை மறித்த ஒபிஎஸ் ஆதரவாளர்களாக கருதப்படும் மனோஜ்பாண்டியன் மற்றும் ஜே.சி.டி பிரபாகரன் இருவரும், இப்போது இது தேவையில்லாத ஒன்று, இது தொடர்பாக பின்னர் பேசிக்கொள்ளலாம் என சொல்லியும் கேட்காத மூர்த்தி, ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டும் அதுதான் கட்சிக்கு நல்லது. யார் ஒற்றைத் தலைமையாக இருக்க வேண்டும் என்பது உங்கள் இருவருக்குமே தெரியும் என பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியுடன் மாதவரம் மூர்த்தி
எடப்பாடி பழனிசாமியுடன் மாதவரம் மூர்த்தி

மாதவரம் மூர்த்திக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்பி கோ.ஹரி, குமரகுரு, அருண்மொழித்தேவன் உள்ளிட்டோரும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மூர்த்தி சொல்வது சரிதான் என பேச, அவர்களின் கருத்துக்கு கூட்டத்தில் ஆதரவு பெருகியிருக்கிறது.

கொந்தளித்த ஜேசிடி பிரபாகர் – அமைதிப்படுத்திய வைத்திலிங்கம்

பொதுக்குழு தொடர்பாக பேச வேண்டும் என்று கூட்டத்தை கூட்டிவிட்டு, இப்படி சம்பந்தம் இல்லாமல் ஒற்றைத் தலைமை பற்றி பேசுவது திட்டமிட்டு செய்வதா ? இல்லை யாரை அவமரியாதை செய்ய முயற்சிக்கின்றீர்கள் என சீறியிருக்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிக்க, கூட்டத்தில் சலசலப்பு அதிகம் ஆகியிருக்கிறது. உடனே தலையிட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அவர்களை சமாதானம் செய்திருக்கிறார்.

ஒபிஎஸ்சுடன் ஜே.சி.டி பிரபாகர்
ஒபிஎஸ்சுடன் ஜே.சி.டி பிரபாகர்

 ஒற்றைத் தலைமை குறித்து கருத்து தெரிவித்த செங்கோட்டையன்

 ஒற்றைத் தலைமை குறித்து பலரும் கருத்து தெரிவித்து காரசாரமாக பேசிக்கொண்டிருந்த நிலையில், எழுந்த மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையின் இது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று பேசி, அவரும் ஒற்றைத் தலைமை கோரிக்கைக்கு நெய் ஊற்றியிருக்கிறார். 

கீழே குனிந்துக்கொண்ட கேபி.முனுசாமி 

நிர்வாகிகள் பலரும் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ஆவேசமாக பேசியபோதும், சிலர் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக ஆக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோதும் எல்லா கூட்டங்களில் கருத்து சொல்லும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் கருத்துச் சொல்லாமல் தலையை கீழே குனிந்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

கேபி முனுசாமி
கேபி முனுசாமி

ஒற்றைத் தலைமை – சட்டம் பேசிய சிவி சண்முகம்

 இப்போது ஒற்றைத் தலைமையாக ஒருவரை தேர்ந்தெடுக்க முடியுமா ? அதற்கு சட்டத்தில் வழிவகை இருக்கிறதா என ஒரு நிர்வாகி கேட்க, அதற்கு பதிலளித்து பேசிய அதிமுக எம்.பி. சிவி சண்முகம், அதெல்லாம் எளிதாக செய்துவிடலாம் என அவர் பங்கிற்கும் ஒற்றைத் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார்.

மவுனமான ஒபிஎஸ் – முடிவு செய்கிறோம் என்ற ஈபிஎஸ் 

கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், ஒபிஎஸ் மணியன் உள்பட பலரும் ஒற்றைத் தலைமையை கருத்தை ஆதரித்து பேச, எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்த ஒபிஎஸ் கூட்டம் முடியும் வரையில் எதுவுமே பேசாமல் அமைதியாய் அமர்ந்திருக்கிறார். இறுதியாக, பேசிய எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத் தலைமை குறித்து நாங்கள் பேசி முடிவு செய்கிறோம் என்று கூறி கூட்டத்தை முடித்திருக்கிறார். 

4 மணி நேரம் நடந்த கூட்டம் – ஒரு மணி நேரத்தில் அறிக்கை 

காலை 11 மணிக்கு தொடங்கிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஒற்றைத் தலைமை சர்ச்சையால் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி வரை கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்திருக்கிறது. ஆனால், காலை 11.57 மணிக்கே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பொதுக்குழுவை எப்படி நடத்துவது என்பது குறித்தும் என்னென்ன தீர்மானங்கள் கொண்டுவருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.’அதிமுக கூட்டத்தில் எழுந்த ஒற்றைத் தலைமை முழக்கம்’ கட்சியை தன்வசப்படுத்தும் எடப்பாடி பழனிசாமி, தனித்துவிடப்படும் ஒபிஎஸ்..! – பரபரப்பு தகவல்கள்

 ஓரங்கட்டப்படும் ஒபிஎஸ் – கட்டுப்படுத்தும் எடப்பாடி பழனிசாமி 

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் தவிர பெரும்பாலன நிர்வாகிகள் ஒற்றைத் தலைமை அதிமுகவிற்கு வேண்டும் என்றும், அதில் சிலர் நேரடியாக எடப்பாடி பழனிசாமியே அதிமுகவிற்கு தலைமையேற்கவேண்டும் என்று பேசியது ஒபிஎஸ்-சை கடும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. இந்த கூட்டமே தன்னை ஓரங்கட்டவும் ஒற்றைத் தலைமையை உருவாக்கவும் எடப்பாடி பழனிசாமியால் கூட்டப்பட்ட கூட்டம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் ஒபிஎஸ். கட்சியை தான் மட்டுமே ஆள வேண்டும் என்று எடப்பாடி நினைத்து காய்களை சாமர்த்தியமாக நகர்த்திவருகிறார் என்றும் பேசியிருக்கிறார்.’அதிமுக கூட்டத்தில் எழுந்த ஒற்றைத் தலைமை முழக்கம்’ கட்சியை தன்வசப்படுத்தும் எடப்பாடி பழனிசாமி, தனித்துவிடப்படும் ஒபிஎஸ்..! – பரபரப்பு தகவல்கள்

ஒற்றைத் தலைமை இப்போது சாத்தியமா ? – அதிமுக விதிகள் சொல்வது என்ன ? 

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதற்கான ஒப்புதலை வரும் 23 ஆம் தேதி வாங்க வேண்டியிருக்கிறது. அதோடு, ஒற்றைத் தலைமை உருவாக்க வேண்டுமென்றால், ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் மட்டுமே ஒற்றைத் தலைமை உருவாக்கம் என்பது சாத்தியப்படும்.

சம்மதிப்பாரா ? சமாளிப்பாரா ஒபிஎஸ் ?

தன்னை ஓரங்கட்டும் முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எடுத்தாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்து தான் ஒருபோதும் விலகமாட்டேன் என்ற உறுதியில் இருக்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஏனென்றால், ஒபிஎஸ் ராஜினாமா செய்யாமல் ஒற்றைத் தலைமையை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

வேட்பாளர்கள் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் என்று கட்சி சார்ந்த அனைத்து முடிவுகளிலும் அறிவிப்புகளிலும் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ ஒபிஎஸ் கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும். அதனால், இப்போதைக்கு ஒற்றைத் தலைமை என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

ஆனால், எல்லா கூட்டங்களிலும் ஒபிஎஸ்-சை அவமானப்படுத்தும் விதமாக செயல்பட்டால், அவரே வெளியே சென்றுவிடுவார் அல்லது வேறுவிதமான முடிவை எடுப்பார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கணக்குபோடுகின்றனர். அந்த கணக்குகளை நிகழ்கால பரதனாக அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்படும் ஒபிஎஸ் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பார்க்க வேண்டும்.

சசிகலாவுக்கு ’தூது’ விடும் ஒபிஎஸ் 

ஒரு கட்டத்தில் தன்னால் எடப்பாடி பழனிசாமியையும் அவரது தரப்பையும் சமாளிக்க முடியாதப்பட்சத்தில் சசிகலாவிடம் சரணடைந்துவிடலாம் என்ற முடிவையும் ஒபிஎஸ் எடுத்து வைத்து, அதற்கான தூதையும் ஏற்கனவே அனுப்பிவிட்டார் என்கிறார்கள். சசிகலாவும் இதுபோன்ற ஒரு சூழலுக்காகவே காத்திருக்கிறார்.’அதிமுக கூட்டத்தில் எழுந்த ஒற்றைத் தலைமை முழக்கம்’ கட்சியை தன்வசப்படுத்தும் எடப்பாடி பழனிசாமி, தனித்துவிடப்படும் ஒபிஎஸ்..! – பரபரப்பு தகவல்கள்

பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமா ? 

எது எப்படியோ வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிச்சயம் பிரச்னை வெடிக்கும் என்று சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏற்கனவே, நடத்தி முடிக்கப்பட்ட உட்கட்சி தேர்தலுக்கு ஒப்புதல் பெறுவது முதல் தீர்மானமாக போடப்பட்டு, திமுகவிற்கு கண்டம் தெரிவித்தும், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சபதமேற்கும் மற்றொரு தீர்மானமும் போடப்படவிருக்கிறது.

அதோடு, சேர்த்து ‘ஒற்றைத் தலைமை’ வேண்டும் என வலியுறுத்தி சிறப்பு தீர்மானத்தை கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டால், அது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர் வியூகம் வகுத்திருப்பதாக சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

எடப்பாடி பழனிசாமியா – சசிகலாவா ? 

இறுதியாக, அதிமுவில் ஒற்றைத் தலைமை ஏற்பட்டால் அது தற்போதைய சூழல்படி எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாவும், ஒபிஎஸ் மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்கி சசிகலாவுடன் சென்று இணைந்தால், அவருக்கு சாதகமாகவும் இருக்கும் என்று கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஏனென்றால், சசிகலாவை அவரது சமூகத்தையும் தவிர்த்துவிட்டு தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிமுகவால் வெற்றி பெற்றுவிட முடியாது என்பது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும் – ஒபிஎஸ்க்கும் தெரியும்.

அதே நேரத்தில் இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை என்பது வழக்கம்போல எழுந்து, வழக்கம்போல அடங்கிவிடும் என்றும் கணிக்கின்றனர்.

 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
Embed widget