கரூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பாளர்
ரூ.7.52 மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து ரூ.4.99 இலட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் முடிவுற்ற திட்ட பணிகளை பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் ஆய்வு.
![கரூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பாளர் Karur District Development Project Works Cloth, Yarn Director Rajesh Study TNN கரூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பாளர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/20/42f26cbf91f1f4c67070995bbd2431691674202760088183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாவட்டம் க.பரமத்தி மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட ஆதி ரெட்டிபாளையம், தென்னிலை மேற்கு, மொஞ்சனூர், கோடந்தூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான திரு.டி.பி.ராஜேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்
க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு எளிதாக கற்பிக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டங்கள் குறித்தும், ஆதிரட்டிபாளையத்தில் பொது சுகாதாரத்துறையின் மக்களை தேடி மருத்துவம் திட்டப் பணிகள் குறித்தும், தென்னிலை மேற்கு ஊராட்சியில் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பணிகளையும், மொஞ்சனூர் ஊராட்சி கஸ்தூரிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.52 மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து ரூ.4.99 இலட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் முடிவுற்ற திட்ட பணிகளை பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தும், கோடந்தூர் ஊராட்சி சின்ன குமாரவலசு பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மேம்படுத்தப்படும் திட்டப் பணியை பார்வையிட்டு விவசாயிகளின் தேவைகளை மற்றும் செயல்படுத்தும் முறைகளையும் கேட்டறிந்தும்,
தொடர்ந்து க.பரமத்தி அரசினர் பள்ளி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து கேட்றிந்தார். மேலும், மண்மங்கலம் சமத்துவபுரத்தில் அனைத்துகிராம அண்ணா மருமலர்ச்சி திட்டத்தின் ரூ.3.80 இலட்சம் மதிப்பில் கீழ் முடிவுற்ற வடிகால் வசதியுடன் கூடிய செங்குத்து உறிஞ்சு குளி அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை உரிய காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இவ்வாய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு .எம்.லியாகத், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி,வாணிஈஸ்வரி, க. பரமத்தி வாட்டர் வளர்ச்சி அலுவலர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி, திருமதி விஜயலெட்சுமி. திரு.பரமேஸ்வரன், ஒன்றிய பொறியாளர் திரு.சிவகுமார், உதவி செயற்பொறியாளர் திருமதி. பூர்ண தேவி, வட்டாட்சியர்கள் திரு.முருகன்(புகளுர்), திரு.செந்தில்குமார் (அரவக்குறிச்சி) திரு.குமரேசன்(மண்மங்கலம்)அரசு அலுவலர்கள் உட்பட பல கலந்து கொண்டார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)