Fact Check: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்று விளம்பரம்.. உண்மையா? பொய்யா?
MK Stalin Image in Times Square: ஸ்டாலினை வரவேற்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அது, உண்மையா? பொய்யா? என தெரிந்து கொள்வோம்.
அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அது, உண்மையா? பொய்யா? என்பதை தெரிந்து கொள்வோம்.
டைம்ஸ் சதுக்கத்தில் ஸ்டாலினை வரவேற்று விளம்பரம்: தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 27ஆம் தேதி இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்டார். இதையடுத்து, 28ஆம் தேதி, அவர் அமெரிக்க சென்றடைந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்று விளம்பரம் வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகின.
உண்மையா? பொய்யா? அதில், வைரலாகி வரும் வீடியோ உண்மை என்பது தெரிய வந்துள்ளது. டைம்ஸ் சதுக்கத்தில் ஸ்டாலினை வரவேற்று விளம்பரம் வெளியானது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. ஆய்வு செய்ததில் அது உண்மை என தெரிய வந்துள்ளது.
Newyork Time Square
— Govi Lenin (@lenin_govi) August 30, 2024
வணக்கம் அமெரிக்கா pic.twitter.com/FJ5C7w5Wzh
ஆனால், பரவி வரும் புகைப்படம் பொய்யானது. கடந்த 2015ஆம் ஆண்டு, ஜனவரி 2ஆம் தேதி வெளியான விளம்பர புகைப்படத்தில் ஸ்டாலினின் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பப்பட்டுள்ளது. Nantucket Preservation Trust வெளியிட்ட கட்டுரை ஒன்றில் டைம்ஸ் சதுக்கத்தின் புகைப்படத்தை எடுத்து அதில் ஸ்டாலின் புகைப்படத்தை எடிட் செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த புகைப்படத்தை சிலர் திட்டமிட்டு பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட புகைப்படம் போலியானது, ஆனால், வீடியோவில் இருப்பது உண்மை என்பது தெளிவாகிறது.
இதையும் படிக்க: பாத்ரூமில் ரகசிய கேமரா.. பெண்களின் ஆபாச வீடியோக்களை விற்ற மாணவர்.. பொறியியல் கல்லூரியில் பரபரப்பு!