"பத்து மணிக்கு மேல் பிரச்சாரம்" - அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு.!
ஏற்கனவே வாக்கு சேகரிப்பின்போது ஆர்த்தி எடுக்க வந்தவர்களுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.
முன்பு எப்போதும் இல்லாத அளவில் மிகவும் பதட்டமான சூழலில் தான் தமிழக தேர்தல் களம் நகர்ந்து வருகின்றது. தேர்தல் ஆணையமும், கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஒருவர் மீது தற்போது போலீசார் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் ஆர்.கே. நகர் பகுதியில் தேர்தல் வீதியை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி போலீசார் தேர்தல் விதிமீறல் பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே வாக்கு சேகரிப்பின்போது ஆர்த்தி எடுக்க வந்தவர்களுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்படத்தக்கது. தற்போது நிலவும் சூழலில் மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேர்தலுக்கு பின் மீண்டும் ஒரு லாக் டவுன் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடையே தொற்றியுள்ளது.