J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு - சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு
தமிழ்நாட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தமிழ்நாட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாஜக தலைவர்கள் அனைவரது மனதில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. திமுகவின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்து வருகின்றது என பேசினார்.
மேலும் நட்டா தனது உரையில், “திருவள்ளுவர் பாரதியார் போன்றவர்களின் பங்களிப்பு நம்மை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பா.ஜ. தலைவர்களின் இதயங்களில் எப்போதும் தமிழ்நாடு இருக்கிறது. நாட்டின் வலிமையை உலக அரங்கில் நிலை நிறுத்த தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. பிரதமர் மோடிக்கு பிடித்தமான மாநிலம் தமிழ்நாடு. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவை உறுதிப்படுத்தியவர் எம்.எஸ் சுவாமிநாதன். வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு பாரத்ரத்னா விருது அறிவித்து மத்திய அரசு பெருமை படுத்தியுள்ளது. I.N.D.I.A கூட்டணி என்பது குடும்ப கூட்டணி. வாரிசு அரசியலை கொண்ட கட்சிகள் தான் அந்த கூட்டணியில் உள்ளது” என பேசினார்.