‛மணி.... மணி...’ சபா நாயகர்-நயினார் நாகேந்திரன் இடையே ‛மணி’யான விவாதம்!
பாமக தலைவர் ஜிகே மணி எழுந்த போது, நயினார் நாகேந்திரனை குறிப்பிட்டு, ‛கவனமா இருந்துக்கோங்க....’ என மணியை செல்லமாய் சபாநாயகர் எச்சரிக்க, அவை மீண்டும் சிரிப்பலையில் மூழ்கியது.
சட்டமன்றத்தில் விவாதங்கள் எந்த அளவிற்கு சூடு பிடிக்கிறதோ... அந்த அளவிற்கு... சுவாரஸ்யங்களும் தினமும் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த சட்டமன்ற நிகழ்வு கொஞ்சம் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யம் தான். பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் விவாதத்தின் மீது பேசிக்கொண்டிருந்த போது, நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, மணி அடித்து அலர்ட் செய்தார். ‛நீங்கம் பேசத்தொடங்கி 11 நிமிடங்கள் ஆகிவிட்டது. எனவே பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்...’ என சபாநாயகர் நினைவூட்டினார். உடனே உங்களிடம் தான் மணி இருக்கிறதா என்னிடமும் மணி இருக்கிறது என்பதை கூறுவதாக நினைத்து, ‛இதோ என் அருகிலும் மணி இருக்கிறது,’ என பாமக தலைவர் ஜி.கே.மணியை நயினார் நாகேந்திரன் காண்பிக்க. உடனே சட்டடென சுதாரித்த சபாநாயகர் அப்பாவு, ‛நான் மணி அடித்தால் பிரச்சினை இல்லை... நீங்கள் மணியை அடித்தால் குற்ற வழக்காகிவிடும் பார்த்துக்கொள்ளுங்கள்...’ என கூற, சபையே கலகலப்பானது.
சரி அதோடு முடிந்ததா என்றால், தனக்கான வாய்ப்பில் பேசுவதற்கு பாமக தலைவர் ஜிகே மணி எழுந்த போது, நயினார் நாகேந்திரனை குறிப்பிட்டு, ‛கவனமா இருந்துக்கோங்க....’ என மணியை செல்லமாய் சபாநாயகர் எச்சரிக்க, அவை மீண்டும் சிரிப்பலையில் மூழ்கியது.
முன்னதாக நயினார் நாகேந்திரம் சட்டசபையில் பேசியது:
தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாடி வருவதாகவும், விநாயகர் சதூர்த்தி விழாவுக்கு தடை விதித்திருப்பது வருத்தமளிக்கிறது. சில கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்...
விநாயகர் சதூர்த்தி கொண்டாடக்கூடாது என அரசு கூறவில்லை. கொரோனா பரவல் காரணமாக வீட்டில் பாதுகாப்பாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ள விதிகளின் படி முறைகளை பின்பற்றி கொண்டாடா கூறியுள்ளாமே் என்று கூறினார்.
மேலும் கடுதல் செய்திகள் அறிய... www.abpnadu.com என்ற இணையத்தில் பின் தொடரலாம்.
#BREAKING
— ABP Nadu (@abpnadu) June 23, 2021
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பாஜகவினர் குரல் கொடுக்க தயாரா?
- பாஜக எம்.எல்ஏ. நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
ABP NADU : https://t.co/wupaoCQKa2#MKStalin | #DMK | #TNAssembly | @mkstalin | @BJP4TamilNadu pic.twitter.com/KXd77CExdw