மேலும் அறிய
Advertisement
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
டாக்டர் இன்று பேசுகிறார். ஆனால், எப்ப வேண்டுமானாலும்... கூட்டணி என்பது கொள்கை முடிவு அல்ல இது. தேர்தல் நேரத்தில் கூட்டணியை முடிவு செய்வோம்"
கூட்டணி ஆட்சி குறித்து இப்போது சொல்ல முடியாது, கூட்டணி என்பது கொள்கை சார்ந்தது அல்ல : செல்லூர் ராஜூ பேட்டி.
பாதாள சாக்கடை பணிகளை செல்லூர் கே.ராஜூ பார்வையிட்டார்
மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில்,"திமுக அரசு மதுரையை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. செல்லூர் பகுதியில் சுணக்கமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பின்னர் கால்வாய்களை தூர்வாரும் மாநகராட்சி ஏன் அதை மழை காலத்திற்கு முன்பே மேற்கொள்ளாதது ஏன்?" என்றார்.
மக்கள் பலம் இருந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்
திமுக எனும் ஆலமரத்தை வெட்ட சிலர் பிளேடுடன் வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு,"ஆலமரமே பிடுங்கிக் கொண்டு போயிருக்கு வெள்ளத்தில். உலகமே அழிந்திருக்கிறது. ஆலமரம் அழியாதா? உதயநிதிக்கு தெரியவில்லை. என்ன தான் கூட்டணி பலமாக இருந்தாலும், மக்கள் பலம் இருந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்" என்றார்
2026ல் கூட்டணி ஆட்சி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு,"கூட்டணி ஆட்சி குறித்து இப்போது சொல்ல முடியாது. பாமக நாடாளுமன்ற தேர்தலில் 10 நாள் முன்பு வரை எங்களுடன் கூட்டணி என பேசிக் கொண்டிருந்தனர். பின், சட்டென்று கூட்டணி மாறி விட்டது. டாக்டர் இன்று பேசுகிறார். ஆனால், எப்ப வேண்டுமானாலும்... கூட்டணி என்பது கொள்கை முடிவு அல்ல இது. தேர்தல் நேரத்தில் கூட்டணியை முடிவு செய்வோம்" என்றார்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
இதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion