இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
சென்னையில் நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், இன்று முதல் வீடு வீடாக சோதனை செய்து ரூ. 5000 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் செல்லப்பிராணிகள்
நாளுக்கு நாள் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் நாய் மற்றும் பூனை மட்டுமே வளர்த்து வந்த நிலையில் தற்போது, எலி, பறக்கும் அணில், பச்சோந்தி, பாம்பு, தவளை என வித விதமான விலங்குகளை வளர்க்க தொடங்கியுள்ளனர். அதிலும் பல வித நாய்களையும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது. மனிதர்களை கொல்லக்ககூடிய ஆக்ரோஷம் கொண்ட நாய்களையும் வளர்து வருகின்றனர். இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவருகிறது. மேலும் ஒவ்வொரு தெருவிலும் பல நூறு தெரு நாய்களின் தொந்தரவும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் வளர்ப்பு நாய்கள்
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், வாக்கிங் செல்பவர்களும் தினந்தோறும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பல்வேறு மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் நடத்தி நாய்களுக்கு உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 57,602 வளா்ப்பு நாய்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை மாநகராட்சியில் கடந்த 2024 கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கு கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் பணி, ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணி கடந்த ஜூன் முதல் நடைபெற்று வருகிறது.
இன்று முதல் ரூ. 5000 அபராதம்
இந்த நிலையில், வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறவும், ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தவும் மாநகராட்சி அறிவுறுத்தியது. உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கும் தீா்மானமும் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இதற்காக பல கட்ட சிறப்பு முகாமும் அறிவிக்கப்பட்டது. செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான 4 முறை காலக்கெடுவும் நீட்டிக்கப்படுள்ளது. இந்த நிலையில், வளா்ப்பு நாய்களுக்கான உரிமம் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கான காலக்கெடு இறுதியாக நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது.
வீடு வீடாக சோதனை- சென்னை மாநகராட்சி
மாநகராட்சி கால்நடைப் பிரிவு இணையதளத்தில் பதிவு செய்துள்ள 98,023 வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களுக்கு அபாரதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று முதல் மண்டலம் வாரியாக சோதனை நடத்தப்படவுள்ளது. தலா 1 சிறப்புக் குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில் கால்நடைப் பிரிவு மருத்துவா் உள்ளிட்ட 3 போ் இடம் பெற்றுள்ளனா். அவா்கள் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களைக் கண்டறிந்து அபாரதம் விதிக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















