தியேட்டருக்காக அகற்றப்பட்டதா பூங்கா...? ஆக்கிரமிப்பிற்கு துணை போகிறதா தி.மு.க. அரசு..? ஜெயக்குமார் கேள்வி
சென்னை, ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக்கின் முன்புறம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்குவது ராயபுரம். இந்த பகுதியில் அமைந்துள்ளது டாக்டர் விஜயராகவலு சாலை. இந்த சாலையில் அமைந்துள்ளது அம்மா மினி கிளினிக். இதன் அருகே சாலையோர பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவிற்கு அருகில் தனியார் திரையரங்கம் ஒன்று உள்ளது. இந்த திரையரங்கத்திற்கு செல்வதற்கு ஏதுவாக தற்போது பூங்கா இடிக்கப்பட்டு, அகற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த பதிவில், ராயபுரம் தொகுதியில் உள்ள அம்மா மினி கிளினிக் அருகே சாலையோர பூங்கா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த சம்பவத்திற்கு தி.மு.க. அரசும் துணை போகியுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
இராயபுரம் தொகுதி 52வது வட்டத்தில் DR. விஜயராகவலு சாலையில் உள்ள அம்மா மினி கிளினிக் பக்கத்தில் சாலையோர பூங்கா இடிக்கப்பட்டு பாரத் திரையரங்கம் புதியதாக வழி ஏற்படுத்தி பெரிய அளவிலான இரும்பு GATE வைத்துள்ளனர்
— DJayakumar (@offiofDJ) August 19, 2022
ஆக்கிரமிப்புக்கு துணை போகிறதா இந்த விடியா அரசு??? pic.twitter.com/YSDvvuojBx
அதாவது, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இராயபுரம் தொகுதி 52வது வட்டத்தில் DR. விஜயராகவலு சாலையில் உள்ள அம்மா மினி கிளினிக் பக்கத்தில் சாலையோர பூங்கா இடிக்கப்பட்டு பாரத் திரையரங்கம் புதியதாக வழி ஏற்படுத்தி பெரிய அளவிலான இரும்பு கதவு வைத்துள்ளனர் ஆக்கிரமிப்புக்கு துணை போகிறதா இந்த விடியா அரசு???” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அரசின் பூங்கா ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனியார் திரையரங்கத்திற்காக பூங்கா அகற்றப்பட்டிருந்தால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவரது இந்த பதிவிற்கு கீழே பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் கடந்த சட்டபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது ராயுபுரம் தொகுதி சட்டசபை உறுப்பினராக தி.மு.க.வின் மூர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மாக்களே இப்படி தண்டித்துள்ளன... ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி!
மேலும் படிக்க : இனி கண்ட இடத்தில் கழிவுநீரை வெளியேற்ற முடியாது.. லாரிகளில் வருகிறது ஜிபிஎஸ்! அரசின் புதிய ஐடியா