மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
இனி கண்ட இடத்தில் கழிவுநீரை வெளியேற்ற முடியாது.. லாரிகளில் வருகிறது ஜிபிஎஸ்! அரசின் புதிய ஐடியா
கழிவு நீர் ஏற்றி செல்லும் லாரி பொது வெளியில் வெளியேற்றுவதை தடுக்கும் வகையில் லாரிகளில் ஜிபிஎஸ் பொருத்தும் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர்களின் பகுதியில் உள்ள குறைகள் கோரிக்கைமள் குறித்து கேட்டறிந்து அதனை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவிக்கையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு கொண்டு வரும் மெட்ரோ நீர் திட்டத்தை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தி வழங்க முதலமைச்சர் அனுமதி பெற்று வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கழிவு நீர் கொண்டு செல்லும் லாரி பொதுவெளியில் கழிவு நீரை வெளியிடுவதை தடுக்கும் வகையில் கழிவு நீர் லாரிக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தி முழுமையாக கண்காணிக்கப்படும் இதற்குப் புதிதாக சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்றும், வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற உள்ளதை அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது முழு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் நுறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீளா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏக்கள் க.கந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, கருனாநிதி, வரலட்சுமி மதுருதனன், எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion