மேலும் அறிய

‘Cup முக்கியம் பிகுலு என்ற நடிகர் விஜய்’ 2026 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதை சொன்னாரா..?

’ரசிகர்களையும் மக்களையும் தன் பட பிரோமஷனுக்காக குழப்பாமல், அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பதை விரைவில் நடிகர் விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்’

நேற்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசியதுதான் இன்றைய சோஷியல் மீடியாவின் ஹாட் டாப்பிக். நேரடியான அரசியல் கருத்துகள் எதையும் அவர் சொல்லவில்லையென்றாலும் அவர் பேசியது எல்லாமுமே மறைமுகமான அரசியல் பாயிட்டுகள்தான்.‘Cup முக்கியம் பிகுலு என்ற நடிகர் விஜய்’ 2026 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதை சொன்னாரா..?

சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ; அரசியல் பேச்சுக்கு காற்புள்ளி

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற சமூக வலைதள சர்ச்சைகளுக்கு காற்புள்ளி வைக்காமல் முற்றுபுள்ளி வைத்து முடித்துவிட்டு, அரசியலுக்கு வருவாரா அல்லது வர மாட்டாரா என்ற பேச்சுக்கு கவனத்தோடு காற்புள்ளி வைத்திருக்கிறார் விஜய். அதில், அப்பா – மகன் என்ற குட்டி கதையை சொல்லி ஆளும் தரப்பையும் சூடேற்றியிருக்கிறார். அதோடு, விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று லியோ வெற்றி விழாவில் அனல்பறக்க பட்டாசை கொளுத்திப்போட்டிருக்கிறார் நடிகர் அர்ஜூன் அதுவும் இப்போது அதே சூட்டோடு சோஷியல் மீடியாவில் பற்றிக் கொண்டு எரிகிறது.

குட்டி கதையில் வரும் குட்டி பையன் உதயநிதியா..?

திமுகவின் எதிர்காலம் உதயநிதிதான் என்ற சாசனம் எழுதப்பட்டுவிட்ட நிலையில், அவர்தான் தன்னுடைய நேரடி அரசியல் எதிரி என்பதை வரித்துக்கொண்டுவிட்ட விஜய், உதய்க்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் தெரிகிறது. அவர் சொன்ன குட்டி கதையில் ’அப்பா சேர்ல உட்காரலாமா இல்ல வேணாமா ? அந்த தகுதி இருக்கா, இல்லையா என்பதெல்லாம் சிறுவனான அந்த மகனுக்கு தெரியாது’ என்று விஜய் பேசியது, உதயநிதி தரப்பை அப்செட் ஆக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகர் விஜய் நேரடியாக உதயநிதியையோ திமுக குறித்தோ ஆட்சி பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆனாலும் அவரது மக்கள் இயக்க நடவடிக்கைகள் அனைத்தும் விஜய் அரசியல் எண்ட்ரியை நோக்கியதாகவே இருக்கிறது.

அரசியலுக்கு வருவாரா ? வரமாட்டாரா ? - எழும் மில்லியன் டாலர் கேள்வி

மக்கள் தான் மன்னர்கள், ஆணையிட்டால் முடித்து வைக்கும் தளபதியாக நான் இருக்கிறேன் என்ற விஜயின் பேச்செல்லாம் தேர்தல் அரசியலை மையப்படுத்தியே இருக்கிறது. ஆனால், அவர் இறுதியில் அரசியலுக்கு வருவாரா ? அல்லது ரஜினி மாதிரி பேச்சோடு நிறுத்திக்கொள்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.

2026ல்  நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய் முடிவு எடுத்திருந்தால் அதற்கான அதிகாரப்பூர்வமான திட்டவட்டமான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட வேண்டும். இல்லையென்றால், அவர் அரசியலுக்கு வருவதற்கான எடுக்கும் முயற்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். இளைஞரணி, சமூக வலைதள அணி, மகளிரணி, தொழிலாளர் அணி என அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில்  தாமதம் ஏற்பட்டால் கூட 2026 தேர்தலில் போட்டி என்று அவர் அறிவித்தாலும்  மிகப்பெரிய  இரண்டு திராவிட கட்சிகளையும் பாமக, பாஜக உள்ளிட்ட பலம் பெறும் கட்சிகளையும் எதிர்க்க முடியாமல் போய்விடும்.

உறுதியான முடிவை தெரிவிக்க வேண்டும்

அதனால், மக்களையும் ரசிகர்களையும் குழப்பாமல் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பதை நடிகர் விஜய் விரைவாக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Embed widget