மயிலாடுதுறை வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு! மேலும் ஒருவர் பலி
மயிலாடுதுறை அடுத்த திருவாலங்காடு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

மயிலாடுதுறை அடுத்த திருவாலங்காடில் நேற்று நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
வெடி விபத்து
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு மாதா கோயில் மெயின் ரோடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. தகரசீட்டால் மேற்கூரை அமைக்கப்பட்ட கட்டிடத்தில் நான்கு தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் தீபாவளி பண்டிகை, கோயில் திருவிழாக்கள், திருமண வைபவங்களுக்கு பட்டாசுகள், நாட்டு வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தனர்.
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
உயிரிழப்பு
இந்த தொழிற்சாலை 2026-ஆம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வெடி தயாரித்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவாவடுதுறையை சேர்ந்த 25 வயதான கர்ணன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த திருவாலங்காட்டை சேர்ந்த 52 வயதான கலியபெருமாள், 45 வயதான லட்சுமணன், விருதுநகர் ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த 37 வயதான குமார் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
TNCMFP:ரூ.65,000 உதவித்தொகை; முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்;விண்ணப்பிக்க நாளையே கடைசி!
விசாரணை
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை சம்பவ இடத்திற்கு வந்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
மேல் சிகிச்சை
தொடர்ந்து லட்சுமணன், கலியபெருமாள், குமார் ஆகிய மூவரும் ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் அரசு விதிமுறைக்கு உட்பட்டு கிடங்கு செயல்படுவதாக உரிமையாளர் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து வெடி விபத்துக்கான தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
அதிகரித்த உயிரிழப்பு
இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக லட்சுமணன் உயிரிழந்தார். இதனால் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
Actor Benjamin: "எம்ஜிஆரை போன்று விஜய்யும் நிச்சயம் அரசியலில் வெற்றி பெறுவார்" - நடிகர் பெஞ்சமின்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

