மேலும் அறிய

TNCMFP:ரூ.65,000 உதவித்தொகை; முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்;விண்ணப்பிக்க நாளையே கடைசி!

TNCMFP: தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் ’தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்' 2024-26 ஆண்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Chief Minister’s Fellowship Programme 2024-2026: தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள  ’தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின்’  25 வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நாளை (26.08.2024) கடைசி நாள். 

Young Professionals

இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கீழ்காணும் துறைகளுக்கு நியமிக்கப்படுவர்.

  • நீர்வளங்களை மேம்படுத்துதல்
  • வேளாண் உற்பத்தி, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துதற்குரிய இணைப்புகளை உருவாக்குதல் 
  • ஊரக மற்றும் நகர்ப்புற குடியிருப்புகள் 
  • கல்வித தரத்தை உயர்த்துதல்
  • சுகாதார குறியீடுகளை மேம்படுத்துதல்
  • அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம்
  • உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு 
  • முறையான கடன் 
  • இளைஞர் நலன்
  • சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பருவநிலை மாற்றம் 
  • தரவு நிர்வாகம் 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தொழிற்கல்வி படிப்புகளான பொறியியல், மருத்தும, சட்டம், விவசாயம், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பு அல்லது கலை, அறிவியல் துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

  •  முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 
  • பணி அனுபவம் கூடுதல் அனுகூலமாக கருதப்படும். 
  • ஆராய்ச்சி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 
  • தமிழ் மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது.

வயது வரம்பு விவரம்:

 விண்ணப்பதாரரின் வயது 26.08.2024 ன்படி, 22-30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 33 ஆகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2022-24ல் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 30 புத்தாய்வு வல்லுநர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை. 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தத் திட்டத்திற்கானத் தேர்வுகள் மூன்று நிலைகளில் நடைபெறும். முதல் நிலையில் கணினி அடிப்படையிலான தேர்வும், இரண்டாம் நிலையில் விரிவான எழுத்துத் தேர்வும், மூன்றாம் நிலையில் நேர்முகத் தேர்வும் நடைபெறும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

முதற்கட்ட தேர்வு 150 மதிப்பெண் கொண்டதாகவும், விரிவான தேர்வு கட்டுரை எழுத்து வகையாகாவும் இருக்கும். அதற்கடுத்து, நேர்க்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 

உதவித்தொகை: 

இப்புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.65,000 மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்காக மாதம் ரூ.10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

இணையம் மூலம் விண்ணப்பிக்க https://cdn.digialm.com/EForms/configuredHtml/32269/90315/Registration.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். 

www.tn.gov.in/tncmfp  அல்லது  www.bim.edu/tncmfp - என்ற இணைப்பை பயன்படுத்தி அறிவிப்புகள் மற்றும் கூடுதல் விவரங்களை காணலாம்.

முக்கிய தேதிகள்:

  • எழுத்துத் தேர்வுக்கான மின்னணு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யும் நாள் - 05.09.2024
  • முதற்கட்ட தேர்வு நடைபெறும் நாள் - 15.09.2024
  • விரிவான எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - செப்டம்பர் 2024 கடைசி வாரம்
  • நேர்முகத் தேர்வு நாள் - அக்டோபர் 2024 கடைசி வாரம்
  • புத்தாய்வு திட்டம் தொடங்கும் நாள் - நவம்பர்,2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய https://www.tn.gov.in/tncmfp/notification.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் - 26.08.2024


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TVK Vijay: த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா.? நாளை விஜய் அறிவிக்கவுள்ள முக்கிய அறிவிப்பு.?
த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா.? நாளை விஜய் அறிவிக்கவுள்ள முக்கிய அறிவிப்பு.?
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TVK Vijay: த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா.? நாளை விஜய் அறிவிக்கவுள்ள முக்கிய அறிவிப்பு.?
த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா.? நாளை விஜய் அறிவிக்கவுள்ள முக்கிய அறிவிப்பு.?
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Kamala vs Trumph Debate: கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
Actor Jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
A Raja MP Interview: முதல்வருக்கு அப்படி நடந்தப்பவே, வீடு கட்டணும்னு முடிவு பண்ணேன்.. ஆ.ராசா எம்.பி., வைரல் இண்டர்வியூ
முதல்வருக்கு அப்படி நடந்தப்பவே, வீடு கட்டணும்னு முடிவு பண்ணேன்.. ஆ.ராசா எம்.பி., வைரல் இண்டர்வியூ
Embed widget