மேலும் அறிய

அம்பாள் பார்த்துக்கொள்வார், மூலவர் பார்த்துக்கொள்வார் என இருக்க கூடாது - அர்ச்சகர்களுக்கு ஆட்சியர் அட்வைஸ்

மயிலாடுதுறையில் நடைபெற்ற கோயில் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதிbதொடங்கி வைத்து உடல்நலம் சார்ந்த அறிவுரைகளை வழங்கினார்.

கோயில் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் 

மயிலாடுதுறை வட்டம் சேந்தங்குடி பகுதியில் அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது;

அம்பாள் பார்த்துக்கொள்வார், மூலவர் பார்த்துக்கொள்வார் என இருக்க கூடாது - அர்ச்சகர்களுக்கு ஆட்சியர் அட்வைஸ்

ஆட்சியர் பேச்சு..

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பணியாளர்கள் பணியுடன் உடல் நலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு அரசானது மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த திட்டம் கோயில்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நோயையும் ஆரம்ப காலத்திலேயே கண்காணித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தீவிரமானால் கட்டுப்படுத்துவது கடினம். ஆகையால், தமிழ்நாடு அரசு மருத்துவ முகாம்களை அந்தந்த துறைகளில் சிறப்பாக செயல்படுத்தி கொண்டு வருகிறது. இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. 

அம்பாள் பார்த்துக்கொள்வார், மூலவர் பார்த்துக்கொள்வார் என இருக்க கூடாது - அர்ச்சகர்களுக்கு ஆட்சியர் அட்வைஸ்

கடவுளை பூஜிப்பது போல் உங்களையும் பூஜிக்கவும்

அர்ச்சகர்கள் ஆலயத்தில் உள்ள சுவாமியை அதிகம் நேசிக்கிறீர்கள். ஆனால், தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த தவறிவிடுகிறீர்கள். கடவுளை பூஜிப்பது போல் உங்களை நீங்களே பூஜிக்க வேண்டும். நம்மை அம்பாள் பார்த்துக்கொள்வார், மூலவரான கடவுள் பார்த்துக் கொள்வார் என நினைக்க கூடாது. இது போன்ற மருத்துவ முகாம்கள் அனைத்து சக்திகளும் சேர்ந்து நமக்கு அமைத்துக் கொடுத்ததாக நாம் என்ன வேண்டும்‌.

அம்பாள் பார்த்துக்கொள்வார், மூலவர் பார்த்துக்கொள்வார் என இருக்க கூடாது - அர்ச்சகர்களுக்கு ஆட்சியர் அட்வைஸ்

சர்க்கரையை குறைத்துக்கொள்ள வேண்டும் 

நாம் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நிறைய பொருள்களில் சர்க்கரை அதிக அளவில் நாம் எடுத்துக் கொள்ளும் நிலை இருக்கின்றது. நம்மை அறியாமலேயே நம் உடலில் சேரும் நிலை உள்ளது. ஆகவே, நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். உணவின் அளவை நாம் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். மருத்துவ முகாமை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இம்மருத்துவ பரிசோதனை முகாமில் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், மருத்துவ ஆலோசனை போன்ற அனைத்தும் உள்ளது. இசை, யோகா போன்றவற்றை தொடர்ந்து செய்து, நம் உடல் நலத்தை காத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ரவிசந்திரன், மயிலாடுதுறை நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Embed widget