மேலும் அறிய

தமிழின் முதல் நாவலாசிரியருக்குப் பெருமை! மயிலாடுதுறையில் பிரம்மாண்ட அரங்கம் - திறந்து வைத்த தமிழக முதல்வர்!

யிலாடுதுறையில் ரூ.5.15 கோடியில் மணிமண்டபம் மற்றும் சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளங்களாக விளங்கும் தமிழின் முதல் நாவலாசிரியர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை மற்றும் தியாகி சாமிநாகப்பன் படையாட்சி ஆகியோரைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலைகள் மற்றும் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மொத்தம் ரூ.5 கோடியே 14 இலட்சத்து 76 ஆயிரத்து 250 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளின் திறப்பு விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் நேரில் கலந்துகொண்டு சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்சீப் வேதநாயகம் பிள்ளை: தமிழின் முதல் நாவலாசிரியருக்குப் பெருமை

மயிலாடுதுறை நகராட்சி, ஆரோக்கியநாதபுரத்தில் ரூ.4 கோடியே 70 இலட்சத்து 36 ஆயிரத்து 250 மதிப்பீட்டில், மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 9511.84 சதுர அடி பரப்பளவில் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதில் 3787.52 சதுர அடியில் பார்வையாளர்கள் அமரும் இடம், 2727.66 சதுர அடியில் உணவுக் கூடம், 1156.70 சதுர அடியில் கூடம் மற்றும் குளிர்சாதன வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் இவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணி

1826-ல் பிறந்த வேதநாயகம் பிள்ளை, தமிழகத்தின் முதல் இந்திய நீதிபதி என்ற பெருமைக்குரியவர். தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை நீதிமன்றங்களில் பணியாற்றிய இவர், 1873-ல் மாயூரம் நகராட்சித் தலைவராகவும் சேவையாற்றினார். தமிழின் முதல் புதினமான 'பிரதாப முதலியார் சரித்திரம்' மட்டுமின்றி, 'நீதிநூல்', 'பெண்மதி மாலை' போன்ற சமூக நீதி மற்றும் பெண் கல்விக்கான நூல்களையும் இயற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகி சாமிநாகப்பன் படையாட்சி: மகாத்மா காந்தியுடன் கைகோர்த்த வீரர்

மயிலாடுதுறை நகராட்சி, தரங்கம்பாடி சாலை, நலவாழ்வு மைய வளாகத்தில் ரூ.44.40 லட்சம் மதிப்பீட்டில் சுதந்திரப் போராட்ட தியாகி சாமிநாகப்பன் படையாட்சி திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.

தியாக வரலாறு

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் 1891-ல் பிறந்த இவர், தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி நடத்திய உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் (ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம்) பங்கேற்றார். 1909-ல் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளான இவர், சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் தனது 18-வது வயதிலேயே (ஜூலை 6, 1909) உயிர்த்தியாகம் செய்தார். இவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2025-ம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று நிறைவேற்ற நிலையில் இன்று சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "அரசு அறிவித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், தமிழறிஞர்களையும் தியாகிகளையும் கௌரவிக்கும் வகையில் இந்தச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார். இவ்விழாவில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்படப் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget