பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சாலை முடக்கம் - பொதுமக்கள் எதிர்ப்பு
சீர்காழி அருகே தென்னலக்குடி பகுதியில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி அருகே தென்னலக்குடி பகுதியில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி சுரங்கப்பாதை சாலைக்கு பதிலாக உயர்மட்ட பாலமாக அமைக்க கோரிக்கை அப்பகுதி பொதுமக்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னலக்குடி - வைத்தீஸ்வரன் கோயில் பிரதான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட தென்னலக்குடி கிராமத்தில் இருந்து வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை வைத்தீஸ்வரன் கோயில், தென்னலக்குடி, ஏடக்குடி வடபாதி, காளிகாவல் புரம், பொட்டவெளி, தெக்கிருப்பு, சாந்தபுத்தூர், நெய்குப்பை, காரைமேடு, திருப்புன்கூர், தலைஞாயிறு, மணல்மேடு, பந்தநல்லூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சாலை
மேலும் சீர்காழியில் இருந்து இந்த சாலை வழியாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த சாலை அண்ணன் பெருமாள் கோவில், தரங்கம்பாடி, திருக்கடையூர், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட நவகிரக கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலையாகவும் உள்ளது. இந்த சாலை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன் உள்ளதாகவும் இருந்து வருகிறது.
கர்நாடகா: புதுப்பிக்கும் பணியின்போது இடிந்து விழுந்த இரண்டு மாடிக் கட்டிடம் - வைரல் வீடியோ
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை
இந்நிலையில் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, தென்னலக்குடி பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் தென்னலக்குடி - வைத்தீஸ்வரன் கோவில் பிரதான சாலை துண்டிக்கப்பட்டு தற்போது சிறிய அளவில் குறுகலாக சப்வே (சுரங்கப்பாதை) அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.
தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!
சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய மக்கள்
இதனைக் கண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது இந்த சாலையை 30 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான சுற்றுலா பஸ்கள் வந்து செல்கிறது. இவ்வாறான சூழலில் குறுகலான சப்வே (சுரங்கப்பாதை) அமைக்க கூடாது பஸ்கள், அறுவடை இயந்திரங்கள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் அமைத்து தர கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"வேரோடு ஒழிக்கனும்" ஊழலுக்கு எதிராக சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு!
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த புறவழிச்சாலை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை ஏற்று விவசாயிகள், மக்கள் தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக விளக்கிக் கொண்டு கலைந்து சென்றனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர்.