ICC Champions Trophy 2025:சாம்பியன்ஸ் டிராபி தொடர்; இந்தியா - பாகிஸ்தான் போட்டி எங்கே? பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025:
சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. பின்னர் ஒரு சில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்ட இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் என்று ஐசிசி ஏற்கனவே அறிவித்தது. ஆனால் ஐசிசியின் இந்த அறிவிப்புக்கு எதிராக பிசிசிஐ போர்க்கொடி தூக்கியது.
பாகிஸ்தான் இந்த தொடர் நடத்தப்பட கூடாது என்றும் பிசிசிஐ விரும்புவதாக அப்போதே தக்வல்கள் வெளியாகின. அப்படி பாகிஸ்தானில் இந்த தொடரை நடத்துவதை ஐசிசி விரும்பினால், இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு ஒரு நாட்டில் நடத்த முன் வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. தனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவை விளையாட வைப்பதற்குப் பல படிகள் இறங்கி வந்தது.
இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது:
உதாரணமாக பாகிஸ்தான் இந்தியா எல்லையில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய போட்டிகளை நடத்தலாம் எனவும் இந்திய அணியின் வீரர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் எனவும் கூறி வந்தது. ஆனால், தற்போது பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்), ஐசிசிக்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கடிதம் எழுதி உள்ளது.
அதாவது, நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அணி பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு போட்டியும் விளையாடாது எனவும் இந்திய அணியின் போட்டிகளைத் துபாய்க்கு மாற்றி வைக்க வேண்டும் எனவும் பிசிசிஐ, ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளது.
🚨 INDIA WON'T TRAVEL PAKISTAN. 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 8, 2024
- The BCCI has communicated with the PCB that due to security concerns, they won't travel to Pakistan for 2025 Champions Trophy. Their desire is to play all their games in Dubai. (Express Sports). pic.twitter.com/y3QAji7nVE
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இது போன்ற பிரச்சினை இப்போது எல்லாம் தொடங்கவில்லை, கடந்த பல வருடங்களாக இந்த இரு நாடுகளுக்கு இடையே இப்படி பிரச்சினை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த முடிவு குறித்து ஐசிசி விரைவில் முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.