மேலும் அறிய

"வேரோடு ஒழிக்கனும்" ஊழலுக்கு எதிராக சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு!

ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கருதுகின்றனர் என்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊழல் விழிப்புணர்வு வாரத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "நமது சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கருதப்படுகின்றன" என்றார்.

"பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள ஊழல்"

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "இந்திய மக்கள் ஒழுக்கமின்மையை விரும்புவதில்லை என்பதோடு சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, மெகஸ்தனிஸ் எழுதினார். அவர்கள் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருக்கும். நமது முன்னோர்களைப் பற்றி ஃபா-ஹியான் என்பவரும் இதே போன்ற குறிப்புகளைக் கூறியுள்ளார்.

நம்பிக்கை என்பது, சமூக வாழ்வின் அடித்தளம். அதுவே ஒற்றுமையின் ஊற்றுக்கண். அரசின் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே ஆட்சிக்கான சக்தியின் ஆதாரமாகும். ஊழல் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருப்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் குறைக்கிறது.

இது மக்களிடையே சகோதரத்துவ உணர்வுகளை மோசமாக பாதிக்கிறது. இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று சர்தார் படேலின் பிறந்த நாளன்று நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் அப்படியே காக்க நாம் உறுதி ஏற்போம். இது வெறும் சடங்கு அல்ல. இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய உறுதிமொழி. அதை நிறைவேற்ற வேண்டிய கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு:

அறநெறி என்பது இந்திய சமுதாயத்தின் லட்சியம். பொருட்கள், பணம் அல்லது சொத்துகளைச் சேர்ப்பதே நல்வாழ்வின் தரம் என்று சிலர் கருதத் தொடங்கும் போது, அவர்கள் அந்த லட்சியத்திலிருந்து விலகி, ஊழல் நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சுயமரியாதையுடன் வாழ்வதில் தான் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.

எந்தவொரு பணியும் சரியான உணர்வுடனும் உறுதியுடனும் செய்யப்பட்டால், வெற்றி நிச்சயம். சிலர் அசுத்தத்தை நமது நாட்டின் தலைவிதி என்று கருதினர். ஆனால், வலுவான தலைமை, அரசியல் உறுதி, குடிமக்களின் பங்களிப்பு ஆகியவை தூய்மைத் துறையில் நல்ல பலன்களை அளித்துள்ளன.

அதேபோல், ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கருதுவது சரியல்ல. ஊழலுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற மத்திய அரசின் கொள்கை ஊழலை வேரோடு ஒழிக்கும். ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானதாகும்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?

Embed widget