மேலும் அறிய

கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் மாஸ்டர் பிளான் இதுதான்..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் 201 பகுதிகளில் பாதிக்கப்பட்ட கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையம் 26.11.2024 முதல் 28.11.2024 வரை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 காலங்களில் எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு கூட்டம் 16.08.2024 மற்றும் 20.09.2024, 25.11.2024 ஆகிய நாட்களில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடத்தப்பட்டுள்ளது. (Automatic Rain Gauge) -13 தானியங்கி மழைமானி மையம், (Automatic Weather Station)-3 தானியங்கி வானிலை மையம் மற்றும் மழைமானி -6 உள்ளது. VHF-ஒயர்லாம் 19 செயல்பட்டில் உள்ளது. Satellite Phone Available- (8991122611). மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 24x7 பருவமழை காலங்களில் சுழற்சி முறையில் அனைத்து துறை அலுவலர்களை செயல்பட்டு வருகிறது. 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 362, திருமண மண்டபம்-146, சமுதாய கூடம்-68 ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடர்பான எச்சரிக்கைகளை அளித்திட 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் மாஸ்டர் பிளான் இதுதான்..!

பாதிக்கப்படக்கூடிய இடங்கள் 

மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 இடங்கள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள்-33, குறைந்த அளவு பாதிக்கக்கூடிய 80, மிக குறைந்த பாதிக்கக்கூடிய இடங்கள் 76 ஆக மொத்தம் 201 பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளார்கள். 

உபகரணங்கள் விபரம் 

புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலை ஏற்படுத்திட ஏதுவாக அனைத்து துறைகளிலும் ஜெசிபி 85, ஜெனரேட்டர்கள் 164, பவர் சா 57, ஹிட்டாச்சி 31, ஆயில் என்ஜின்கள், மணல் மூட்டைகள் 40351, மரம் அறுக்கும் கருவிகள்-84, சவுக்கு கம்பங்கள், 34110 பிளிச்சிங் பவுடர் 5870 கிலோ ஆகியன போதிய அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் மாஸ்டர் பிளான் இதுதான்..!

பல்வேறு குழுக்கள் 

வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புக்குழு ஆகிய குழுக்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்து துறை அலுவலர்களைக்கொண்ட தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 வட்டத்திற்கும் துணை ஆட்சியர்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் உள்ளார்கள்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

சார்பில் 28 கடலோர மீனவ கிராம பஞ்சாயத்தர்களை உள்ளடக்கிய Whatsapp group குழு உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ள பெருக்கின்போது பொது மக்களை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க 73 Rescue குழுக்களும் 80 தன்னார்வ நீச்சல் நன்கு தெரிந்த நபர்களும் செல்பேசி எண்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் மாஸ்டர் பிளான் இதுதான்..!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

பருவகால ஆய்வுகள் செய்யப்பட்டு பழுதான மின்கம்பங்களில் 314 மாற்றப்பட்டுள்ளன. மின் பாதையில் இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் கிளைகள் 2219 அகற்றப்பட்டுள்ளது. 5600 மின்கம்பங்கள் இருப்பு உள்ளது. மின்மாற்றிகள் -44 அவசர காலத்திற்கு பயன்படுத்திட இருப்பு உள்ளது.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை 

ஒவ்வொரு வட்டாரத்திலும் சுகாதார தேவைகளை Rapid Response Team ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 108 ஆம்புன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது. வெள்ளம் மற்றும் மழையின் போது நாய் கடி மற்றும் பாம்பு கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் TD தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (AVR) மற்றும் பாம்பு எதிர்ப்பு வி~ம் (ASV) இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் மாஸ்டர் பிளான் இதுதான்..!

கூட்டுறவுத்துறை

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக உணவு பொருட்கள் வழங்கிட 157 அங்காடிகள் கண்டறியப்பட்டுள்ளது. மழை கால இருப்பு 20 சதவீதம் அங்காடிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

26.11.2024 மற்றும் 27.11.2024 ஆகிய இருதினங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு விடுத்துள்ளதால் கனமழையும் அதி தீவிர மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மறுஅறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் எனவும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திடவும், அனைத்து மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் மாஸ்டர் பிளான் இதுதான்..!

கட்டுப்பாட்டு அறை 

இந்திய வானிலை மையம் 26.11.2024 முதல் 28.11.2024 வரை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் மழை சேதம் தொடர்பான மயிலாடுதுறை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
Embed widget