Mayiladuthurai Power Shutdown (10.09.24): மயிலாடுதுறையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?- இதுல உங்க பகுதி இருக்கா பாருங்க?
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (10.09.24) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
Mayiladuthurai Power Shutdown 10.09.24 : மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
மின் வினியோகம் தடைபெறும் பகுதிகள்
அந்த வகையில் நீடூர் துணை மின் நிலையத்திற்கு பகுதிகளில் இன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நீடூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான நீடூர், மல்லியகொள்ளை, வில்லியநால்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழி தேவன், கங்கணாபுத்தூர், மேலநல்லூர், நடராஜபுரம், கீழமருதநல்லூர், மேலமருதநல்லூர், பொன்மாசநல்லூர் உள்ளிட்ட ஊர்களும்
ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மயிலாடுதுறை இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் அதற்கேற்ப தங்கள் மின் தேவையினை பூர்த்தி செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சியளிக்கும் அரசு: விண்ணப்பிப்பது எப்படி.?