மேலும் அறிய

"காதலன் கண்முன்னே காதலி தீக்குளிப்பு" காப்பாற்ற சென்ற காதலன் மீதும் பற்றிய தீ...!

மயிலாடுதுறையில் காதலனிடம் சண்டையிட்டுக்கொண்டு காதலி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீக்காயம் ஏற்பட்ட காதல் ஜோடி

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் 24 வயதான மகன் ஆகாஷ். இவர், பூம்புகார் அருகே உள்ள மேலையூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நாகப்பன் என்பவரின் 20 வயதான மகள் சிந்துஜா. இவர், மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. 

காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு 

இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக மாணவி சிந்துஜா சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் நேற்று பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆகாஷ் பழகி வரும் வேறு பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது. 

காதலன் கண்முன்னே தீக்குளித்த காதலி

அதனை அடுத்து மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்த சொன்ன சிந்துஜா, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தனது கண் முன்பு காதலி தீக்குளித்ததால் அதிர்ச்சி அடைந்த காதலன் ஆகாஷ் பதறித்துடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது ஆகாஷ் மீதும் தீப்பற்றியது. இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்து கீழே சரிந்துள்ளனர். இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆகாஷ் 60 சதவீத தீ காயங்களும், சிந்துஜா 40 சதவீதம் தீ காயங்களுடன் இருந்த நிலையில் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருவரிடமும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.

காவல்துறையினர் விசாரணை 

இந்நிலையில் இதுதொடர்பாக மயிலாடுதுறையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி திடீரென தீக்குளித்ததும், அவரை காப்பாற்ற முயன்றபோது காதலனும் தீக்காயம் அடைந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Savukku Shankar: சவுக்கு சங்கர் ஆஃபிஸ் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸ்! கஞ்சா வழக்கில் சூடுபிடிக்கும் விசாரணை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget