மேலும் அறிய

விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறையா? - “நாங்க இருக்கோம்”... வயல்வெளியில் ஒலிக்கும் இந்தி பாடல்கள் - உற்சாகத்தில் விவசாயிகள்...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நடவு பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்களால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஆட்கள் பற்றாக்குறையால் இனி தங்களின் விவசாயம் பாதிக்கப்பட்ட எனவும், குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவது தங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

பிரதான தொழிலான விவசாயம் 

காவிரி கடைமடை டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி தாலுக்காவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், காவிரி நீர் ஆனது இந்த மாவட்டத்தில் இப்பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கு பயன்பட்டது இல்லை. காரணம் பல இடங்களில் முறையாக தூர்வாராததும், ஏ, பி வாய்க்கால்களை மட்டும் தூர்வாரி சி, டி வாய்க்கால்கள் எப்போதும் தூர்வாரப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது.

விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறையா? -  “நாங்க இருக்கோம்”... வயல்வெளியில் ஒலிக்கும் இந்தி பாடல்கள் - உற்சாகத்தில் விவசாயிகள்...!

நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் 

ஆகையால் இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு அதிக அளவில் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். அதற்காக அதிகளவில் மின் மோட்டார்களை பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீரை கொண்டு சிலர் முப்போகம் விவசாயம் மேற்கொள்கின்றனர். அதற்காக தடையில்லா முன்முனை மின்சாரம் வேண்டி கடந்த காலங்களில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு தற்போது 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் பெற்று சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அவர்கள்  பயன்பெறும் வகையில் ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கி உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் விவசாயத்தில் முன்புறமாக ஈடுபட்டுள்ளனர். 

விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறையா? -  “நாங்க இருக்கோம்”... வயல்வெளியில் ஒலிக்கும் இந்தி பாடல்கள் - உற்சாகத்தில் விவசாயிகள்...!

ஆட்கள் பற்றாக்குறை 

தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மாவட்டம் மயிலாடுதுறை.  மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காததால் பல ஆண்டுகளாக விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால், இயந்திரம் மூலம் நடவு மற்றும் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அறுவடை பணி முழுவதும் இயந்திரம் மூலம் நடந்து வந்தாலும், நடவுப்பணிகளில் இன்னமும் நாற்றுவிட்டு பெண் கூலிதொழிலாளர்களை கொண்டு நடவு செய்யும் பணிகளை பல விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறையா? -  “நாங்க இருக்கோம்”... வயல்வெளியில் ஒலிக்கும் இந்தி பாடல்கள் - உற்சாகத்தில் விவசாயிகள்...!

சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும் என்பதாலும், இயந்திர நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கரைந்து சேதமடைவதை தவிர்ப்பதற்காக பல விவசாயிகள் பழைய முறைப்படி கூலி ஆட்களை வைத்த நாற்றுப்பறித்து பெண் தொழிலாளர்களை வைத்து நடவுபணிகளை செய்து வருகின்றனர். கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு ஆட்கள் சென்றுவிடுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகளின் பொது நூறுநாள் வேலையை நிறுத்தி வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. 

விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறையா? -  “நாங்க இருக்கோம்”... வயல்வெளியில் ஒலிக்கும் இந்தி பாடல்கள் - உற்சாகத்தில் விவசாயிகள்...!

வடமாநில தொழிலாளர்களை நாடிசென்ற விவசாயிகள் 

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது கட்டம் கட்டும் பணி உள்ளிட்ட மற்ற தொழில்களில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபடுத்த படுவது போல, வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர். மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் வடமாநில ஆண் தொழிலாளர்கள் விவசாய வேலைகள் செய்து நாற்றுப்பறித்து அவர்களே நடவு செய்யும் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு 4500 ரூபாய் சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் நாற்றுபரித்து நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 1 நாளைக்கு 4 ஏக்கர் வரை நடவு பணிகளை செய்து வருகின்றனர். சாப்பாட்டுக்கு நாம் அரிசி வாங்கி கொடுத்துவிட்டால் அவர்களே சமைத்து சாப்பிட்டு விட்டு பணி செய்கின்றனர். டீ செலவுக்கு மட்டும் நாம் பார்த்து கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களை நடவு பணிக்கு ஈடுபடுத்தும்போது ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரத்துக்கு 500  ரூபாய் வரை செலவு ஆகிறது. ஆனால் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பயன்படுத்தும்போதும் ஒரு ஏக்கருக்கு 4,500 ரூபாய் தான் வருகிறது. மேலும் 4 ஆயிரம் வரை மிச்சமாகிறது. காலை 6 மணிக்கு பணியை தொடங்கும் வடமாநில தொழிலாளர்கள் மாலை வரை வேலை செய்கின்றனர். ஒரு நாளுக்கு 4 ஏக்கர் வரை நடவு செய்கின்றனர். 2 நாட்களில் 8 ஏக்கர் நடவு செய்து விடுகின்றனர்.

விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறையா? -  “நாங்க இருக்கோம்”... வயல்வெளியில் ஒலிக்கும் இந்தி பாடல்கள் - உற்சாகத்தில் விவசாயிகள்...!

தமிழக வயல்வெளி ஒலிக்கும் இந்தி பாடல்கள் 

விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளிகள் தங்களின் களைப்பு தெரியாமல் இருக்க வடமாநில பாடல்களை பாடி உற்சாகத்துடனும் மிக நேர்த்தியாக திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுபரித்து கைநடவு செய்து வருகின்றனர். குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவது தங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதாகவும், இனி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயம் தடைபடாது என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Tamilnadu Roundup: ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
Loksabha Attendance: மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Tamilnadu Roundup: ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
Loksabha Attendance: மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Russia Vs Trump: “ஒழுங்கா டீலுக்கு ஒத்துக்கோ, இல்லைன்னா...“'; ட்ரம்ப் விதித்த கெடு - பணியுமா ரஷ்யா.?
“ஒழுங்கா டீலுக்கு ஒத்துக்கோ, இல்லைன்னா...“'; ட்ரம்ப் விதித்த கெடு - பணியுமா ரஷ்யா.?
Chennai Crime: மனைவியுடன் படம் பார்த்த புது மாப்பிள்ளை திடீர் மரணம் - திருமணமாகி ஒரு மாதம் தான்..
Chennai Crime: மனைவியுடன் படம் பார்த்த புது மாப்பிள்ளை திடீர் மரணம் - திருமணமாகி ஒரு மாதம் தான்..
Vinfast Prebooking: வின்ஃபாஸ்ட் EV கார்களை முன்பதிவு செய்வது எப்படி? VF6, VF7 - 5 வேரியண்ட்கள், 6 கலர்கள் - டெபாசிட் எவ்ளோ?
Vinfast Prebooking: வின்ஃபாஸ்ட் EV கார்களை முன்பதிவு செய்வது எப்படி? VF6, VF7 - 5 வேரியண்ட்கள், 6 கலர்கள் - டெபாசிட் எவ்ளோ?
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
Embed widget