மயிலாடுதுறையில் உருவான சந்திரயான் விண்கலம்; ஆச்சரியமடைந்த பொதுமக்கள்
மயிலாடுதுறையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேக்கரி ஒன்றில் 18 அடி உயரத்தில் சந்திரயான் 3 மாதிரி கேக் தயார் செய்து பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேக்கரி ஒன்றில் 18 அடி உயரத்தில் சந்திரயான் 3 மாதிரி கேக் தயார் செய்து பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். ஆண்டுதோறும் புத்தாண்டு மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல வடிவங்களில், பல்வேறு வகையான கேக்குகள் தாயார் செய்து அவற்றை காட்சி படுத்துவதும், விற்பனைக்கு வைப்பதும் பல இடங்களில் வழக்கமான செய்து வருகின்றனர். மேலும் இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் பேக்கரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் புதுமையான இனிப்பு ரகம் கொண்ட கேக்குகளை செய்து பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவது வழக்கம். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சந்திரயான் 3 விண்கலம் போன்று மாதிரி கேக் வடிவமைத்து பொதுமக்களின் பார்வைக்காக பேக்கரி கடை வாசலில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்த கேக் சுமார் 18 அடி உயரத்தில் பலவகை மூலப் பொருட்கள் கொண்டு இனிப்பான மாதிரி கேக் தயார் செய்யப்பட்டுள்ளது. பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கேக்கை மயிலாடுதுறையில் உள்ள மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்து பார்வையிட்டு சென்று வருகின்றனர். மேலும் பலர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Prabhu Net Worth : அடேங்கப்பா! நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அசந்துபோன ரசிகர்கள்..
இதைப் பற்றி கடை உரிமையாளர் கூறுகையில், சந்திரயான் 3 விண்கலம் உலக அளவில் நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து, அதனை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது மாதிரி கேக்காக வடிவமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போன்ற கேக்கை தயார் செய்துள்ளோம். மேலும் அடுத்த அடுத்த ஆண்டுகளிலும் புத்தாண்டு , கிருஸ்துமஸ் போன்ற தினங்களுக்கு இன்னும் புதுமையான முறையில் கேக் ரெடி செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்று கூறினார்.