Boxing Day Test: பாக்சிங் டே டெஸ்ட் உருவானது எப்படி..? அதன் வரலாறு என்ன? அதில் இந்திய அணியின் செயல்பாடு என்ன..?
Boxing Day Test: 1980 முதல், ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை நடத்துகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. அதே நேரத்தில், ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை தொடங்கும் போட்டி ’பாக்சிங் டே டெஸ்ட் போட்டி’ என்று அழைக்கப்படுகிறது. அப்படி அழைக்கப்படுவதற்கான காரணம்? பாக்சிங் டே டெஸ்டில் இதுவரை இந்தியாவின் செயல்பாடுகள் என்னென்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாக்சிங் டெஸ்ட் என்றால் என்ன? அந்த பெயர் வர காரணம் என்ன?
உலகம் முழுவதும் அதிக நபர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்று. இந்தப் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே ஒருவருக்கொருவர் அன்பை பரிசுகள் மூலம் பரிமாறி கொள்வார்கள். அதற்கேற்ப இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறிய பெட்டிகள் (பாக்ஸ்) வைக்கப்படுவது வழக்கம். அதில் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு சிலர் பரிசை கொடுப்பார்கள். இந்த பாக்ஸை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி திறந்து பரிசை எடுத்து தருவார்கள். அந்த பாக்ஸை திறக்கும் நாளன்று தொடங்கும் விளையாட்டு போட்டிகள் பாக்சிங் டே விளையாட்டு போட்டிகள் என்று அழைக்கப்படும்.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன் உள்நாட்டு கிரிக்கெட்டில் இது தொடங்கியது, ஆண்டு 1892... கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டி நடைபெற்றது. விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. இதற்குப் பிறகு, முதல் சர்வதேச பாக்சிங் டே டெஸ்ட் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்தது, ஆண்டு 1950. ஆனால், இந்த டெஸ்ட் டிசம்பர் 26 க்குப் பதிலாக டிசம்பர் 22 அன்று தொடங்கியது, டெஸ்டின் ஐந்தாவது நாள் பாக்சிங் டே .
இந்திய அணி என்று முதல் பாக்சிங் டே டெஸ்டில் விளையாடுகிறது?
1968-ம் ஆண்டு முதல் முறையாக பாக்சிங் டே அன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதற்குப் பிறகு, 1980 முதல், ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. ஆனால் இது கிறிஸ்துமஸுக்கு முன் மூன்று முறை அதாவது 1984, 1988 மற்றும் 1994 இல் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் இப்போது ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவைத் தவிர, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை நடத்தி வருகின்றன.
அதேசமயம், இந்தியாவைப் பற்றி பேசினால், 1985-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக பாக்சிங் டே டெஸ்டில் விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் கிரெக் மேத்யூஸ் மற்றும் ஆலன் பார்டர் ஆகியோர் சதம் அடித்தனர். அதேசமயம் இந்திய அணியில் கிறிஸ் ஸ்ரீகாந்த், திலீப் வெங்சாகர், கேப்டன் கபில்தேவ் ஆகியோர் அரைசதம் கடந்திருந்தனர். இதையடுத்து, ரவி சாஸ்திரி மற்றும் ஷிவ்லால் யாதவ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் இந்திய அணி போட்டியை டிரா செய்தது.
1992 ஆம் ஆண்டு முதல் முறையாக பாக்சிங் டே டெஸ்ட்...
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 1992-ம் ஆண்டு முதல் முறையாக பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதுவரை இரு அணிகளும் 6 பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, தென்னாப்பிரிக்கா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா...
1985 - ஆஸ்திரேலியா vs இந்தியா (மெல்போர்ன்) - போட்டி டிரா ஆனது
1987 - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (கொல்கத்தா) - போட்டி டிரா ஆனது
1991 - ஆஸ்திரேலியா vs இந்தியா (மெல்போர்ன்) - AUS 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
1992 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா (போர்ட் எலிசபெத்) - SA 91 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
1996 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா (டர்பன்) - SA 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
1998 - நியூசிலாந்து vs இந்தியா (வெல்லிங்டன்) - NZ 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
1999 - ஆஸ்திரேலியா vs இந்தியா (மெல்போர்ன்) - AUS 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2003 - ஆஸ்திரேலியா vs இந்தியா(மெல்போர்ன்) - AUS 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
2006 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா(டர்பன்) - SA 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2007 - ஆஸ்திரேலியா vs இந்தியா(மெல்போர்ன்) - AUS 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2010 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா(டர்பன்) ) - IND 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2011 - ஆஸ்திரேலியா vs இந்தியா (மெல்போர்ன்) - AUS 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2013 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா (டர்பன்) - SA 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2014 - ஆஸ்திரேலியா vs இந்தியா (மெல்போர்ன்) - போட்டி டிரா ஆனது.
2018 ஆஸ்திரேலியா vs இந்தியா (மெல்போர்ன்) - IND 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2020 - ஆஸ்திரேலியா vs இந்தியா (மெல்போர்ன்) - IND 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2021 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா (செஞ்சுரியன்) - IND 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான பாக்சிங் டே டெஸ்ட்
1992 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா(போர்ட் எலிசபெத்) - SA 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
1996 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா(டர்பன்) - SA 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2006 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா(டர்பன்) - SA 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2010 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா (டர்பன்) - IND 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2013 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா (டர்பன்) - SA 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2021 - தென்னாப்பிரிக்கா vs இந்தியா (செஞ்சுரியன்) - IND 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி