மேலும் அறிய
மதுரையில் துப்பாக்கி காட்டி மிரட்டி சுங்கச்சாவடியில் அடாவடி -செய்த மூன்று பேர் கைது
குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் வேறு எதுவும் குற்றசம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது

கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், பொன்ராஜ், முத்துக்குமார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் வந்த 3 பேர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கட்டணம் செலுத்த முடியாது என வாக்குவாதம் செய்ததுடன் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர்.
#Madurau | மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் சுங்கச்சாவடியை கடக்கும் C.C.T.V கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.#madurai | #abpnadu | #gunshot pic.twitter.com/g7Rd7OwAD7
— Arunchinna (@iamarunchinna) April 22, 2022

இதனால் சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பின்னர் அங்கிருந்து காரில் வந்த மூன்று பேர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சுங்கச் சாவடியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகிய காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது அவர்களை பிடிக்க அனைத்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். ஆனால் அவர்களே மீண்டும் திரும்பி வந்த போது போலீசார் அந்த சிகப்பு நிற மஹிந்திரா வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Keezhadi Excavation: 8 ஆம் கட்ட அகழாய்வில் ஆபரணமாக பயன்படுத்திய பாசி மணிகள் கண்டுபிடிப்பு
அந்த விசாரணையில் பிடிபட்ட மூவரும் தென்காசி மாவட்டம் சுரண்டையை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், முத்துக்குமார், பொன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும்., அவர்களிடமிருந்து ஒரு ஏர் பிஸ்டல் மற்றும் ஏர்கன் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு திருமங்கலம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது அந்த கும்பல் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது எனக் கூறி துப்பாக்கியை வைத்து விரட்ட முயன்ற சம்பவத்தின் உடைய சி.சி.டி.வி., காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் வேறு எதுவும் குற்றசம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது” என தெரிவித்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சித்திரைத் திருவிழாவில் முன்னேற்பாடுகள் முறையாக செய்திருந்தால் கசப்பான சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் - வைகை மக்கள் இயக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
கிரிக்கெட்





















