Keezhadi Excavation: 8 ஆம் கட்ட அகழாய்வில் ஆபரணமாக பயன்படுத்திய பாசி மணிகள் கண்டுபிடிப்பு
அகழாய்வு செய்ய உள்ளே இறங்கிய போது கொடிய விஷம் கொண்ட சுமார் 3 அடி நீளம் கொண்ட கருப்பு நிறம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு உள்ளே இருந்துள்ளது
கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2ஆம் மற்றும் 3 ஆம் கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து 4 முதல் 7ஆம் கட்டம் வரையிலான அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அழகாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#கீழடியில் 8ம்கட்ட அகழாய்வில் நம் முன்னோர்கள் பழங்காலத்தில் ஆபரண பொருட்களாக பயன்படுத்திய கண்கவரும் வண்ணங்களில் பாசி மணிகள் கண்டுபிடிப்பு, #madurai | #Sivagankai | #கீழடி | @SRajaJourno | @saranram | @johnraja303 | @SuVe4Madurai | @TThenarasu | #TamilNadu pic.twitter.com/N0xoWuzJC4
— Arunchinna (@iamarunchinna) April 20, 2022
#கீழடியில் அகழாய்வு குழியில் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு
— Arunchinna (@iamarunchinna) April 20, 2022
சிவகங்கை மாவட்டம் கீழடியில்,தற்போது 8ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. #கீழடி | #sneak | @SRajaJourno | #abpnadu pic.twitter.com/AArz1pNPVw