(Source: ECI/ABP News/ABP Majha)
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை - தேனி நீதிமன்றம் தீர்ப்பு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பை பகுதியில் விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெற லஞ்சம் வாங்கிய மின்வாரிய துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லூரி சாலையை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கோம்பை பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு உத்தமபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது அங்கு மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றிய குபேந்திரன் (53) மின் இணைப்பு வழங்குவதற்கு கள ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கை கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது, ஆனால் தமிழ்நாட்டில்... சென்னை வானிலை மைய இயக்குனர் எச்சரிக்கை!
அதற்கு காசி விஸ்வநாதன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதனால் ரூ.1,000 கழித்து ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு குபேந்திரன் கேட்டுள்ளார். பின்னர் அவர் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார். இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் காசி விஸ்வநாதன் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
Chembarambakkam Lake: இடி, மின்னல்..! அடித்து வெளுக்கும் கனமழை..! செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன?
Reservation : 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மறுசீராய்வு மனு - அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு
அதை குபேந்திரனிடம் அவர் கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணையை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். லஞ்சம் வாங்கிய குபேந்திரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்