காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது, ஆனால் தமிழ்நாட்டில்... சென்னை வானிலை மைய இயக்குனர் எச்சரிக்கை!
வடகிழக்கில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வழுவிழந்துள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வழுவிழந்துள்ளது என்றும், இருப்பினும், தமிழ்நாட்டில் மிக கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தென்மேற்கே வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களை மழை பெய்துள்ளது. 6 இடங்களில் அதிக கனமழையும், 14 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
அதிகபட்சமாக சீர்காழிகள் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச மழையாகும்.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 12,13 தேதிகளில் பரவலாகவும், 14 ,15ல் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை ஒரு இடங்களில் கனமழை மிக கனமழையும், சென்னை முதல் கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு வடதமிழகம் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு40முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடகிழக்க பருவமழையை பொருத்தவரை கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழக மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு இயல்பை விட 15 சதவீதம் அதிகமாக உள்ளது.” என்றார்.