மேலும் அறிய
Advertisement
மதுரை - திருச்சி இரட்டை வழிப் பாதையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு
ஆய்வை துவங்கிய பொது மேலாளர் ஜான் தாமஸ் மதுரையில் ரயில் நிலைய நவீன சிக்னல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ரயில்வே பிரிவை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி திங்கட்கிழமை இன்று (13.12.2021) மதுரை - திருச்சி இரட்டை வழிப் பாதையில் "அப் லைனில்" ஆய்வு செய்ய இருக்கிறார். முதலில் மதுரை ரயில் நிலையத்தில் காலை 9 மணிக்கு ஆய்வை துவங்கிய பொது மேலாளர் ஜான் தாமஸ் மதுரையில் ரயில் நிலைய நவீன சிக்னல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
பின்பு முதலாவது நடைமேடையில் உள்ள பயணிகள் வசதிகள் மற்றும் நடைமேம்பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்பு மதுரை ரயில் நிலைய புதிய கட்டிட பணித்திட்டங்களை சிறப்பு வீடியோ திரை மூலம் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். புதிய ரயில் நிலையம் இரண்டடுக்கு கட்டிடமாக அமைய இருக்கிறது. மேலும் ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் இருக்கிறது. பொது மேலாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது பாம்பன் பாலம் பணிகள் விரைவில் முடிவடையும் என்றார்.
கொரோனா தொற்றுக்கு முன்பு இயங்கிய பயணிகள் ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும் என்றார். ஆய்வின்போது பொது மேலாளருடன் முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, முதன்மை ரயில் இயக்க மேலாளர் ஸ்ரீ குமார், முதன்மை பொறியாளர் பிரபுல்ல வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். ரயில் இயக்கம், வர்த்தகம், சிக்னல், மருத்துவமனை மின்மயமாக்கல் பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறந்த பணியினை பாராட்டி குழு விருது வழங்கி கௌரவித்தார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion