'உச்சி பனை மரத்துக்கு நொடியில ஏறுவேன்.. ஆனா இன்னைக்கு நிலைமை' - பனை தொழிலாளி வேதனை
”அப்பா, அம்மா நிலைமையை பார்த்து சாகவும் மனசு வரல. போற உசுர் அதுவா போகட்டும்னு தண்ணியும், கஞ்சியும் குடிச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்” - என்கிறார் விபத்தில் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளி.
’பனைமரம் ஏறும் போதும், இறங்கும் போது கைகால் எல்லாம் நடுங்கும். கப்ப ரெண்டும் வலிக்கும். கரும்பு சிலாம்பு கைய கிழிக்கும், பாம்பு, கதண்ட கண்டா கொலை நடுங்கும்” என்ற கஷ்டத்தை விவரித்தார் மணிகண்டன். ஓட்டு வீட்டில் வாழும் மணிகண்டன் மாற்றுத்திறனாளி, சில வருடங்களுக்கு முன் வரை பனைமரம் ஏறி வைரம் பாஞ்ச ஒடம்பாதான் இருந்தது. போதாத காலம் மரத்தில் இருந்து விழுந்ததால் இடுப்புக்கு கீழ எதுவும் வேலை செய்யல. ஒன்னுக்கு கூட தானாதான் போகும். இதைப் பார்த்த மனைவியும் குழந்தைகளும் கூட விட்டுட்டு போய்டாங்க வயசான அம்மா, அப்பா தான் பார்த்துக்கிறாங்க. இனி என்ன செய்ய போறேனு தெரியல என்ற படி கண்ணீர்பட வெதும்பினார் மணிகண்டன்.
இரண்டு குழந்தைக்கு அப்பா தான் மணிகண்டன். ஆனாலும் அவரை தற்போது அவரின் தாய் தான் கைக் குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். பனைமரத்தில் இருந்து விழுந்த பனை தொழிலாளி மணிகண்டனின் நிலை வேதனையானது. மருத்துவ உதவிகேட்டு கையெடுக்கிறார்#sivagangai @SRajaJourno @CMOTamilnadu @SivagangaiDist pic.twitter.com/50pvVaxdkk
— arunchinna (@arunreporter92) April 3, 2023