மேலும் அறிய

திருவாடானையில் சைவ, சமண, பௌத்த தடங்கள்.. ராமநாதபுரத்தின் மறைக்கப்பட்ட வரலாறு, மரபு நடை தரும் தகவல்!

ராமநாதபுரம்மாவட்டத்தில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் உள்ளது திருவாடானையில்தான். மரபு நடை நிகழ்வில் தகவல்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் உள்ளது, திருவாடானை பகுதியில்தான் என மரபு நடை நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

தேவாரப்பாடல்களிலும், கல்வெட்டுகளிலும்  இவ்வூர், ஆடானை எனப்படுகிறது. 
 
எண்திசை வரலாற்று மரபுநடைக்குழு, ராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் காண இருநாட்கள் சேது நாட்டு மரபு நடைப் பயணம் ஏற்பாடு செய்துள்ளது. திருவாடானையில் தொடங்கிய நிகழ்வில், தலைவர் நித்யகலா செந்தில்குமார் தலைமையில், செயலாளர் ராதா வைத்யநாதன் அனைவரையும் வரவேற்றார். இதில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது...,” ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டத்தில் தான் அதிக நெல் விளைச்சல் இருக்கும். இதனால் மாவட்டத்தில் அதிகளவு சிவன் கோயில்கள், சமண, பௌத்த தடங்கள் இங்கு உள்ளன. மன்னர்காலத்தில் இப்பகுதியில் பல ஊர்கள் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இவ்வூர் பற்றி திருஞானசம்பந்தர் 11 பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய மற்ற பதிகங்களில் உள்ளது போல் இதன் 8வது பாடலில் இராவணன் பற்றிய குறிப்போ, 10வது பாடலில் சமண பௌத்த மதங்கள் பற்றிய கண்டனமோ இல்லாமல் உள்ளது ஆச்சரியமளிக்கிறது. அருணகிரிநாதர் திருவாடானை கோயில் முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். தேவாரப்பாடல்களிலும், கல்வெட்டுகளிலும்  இவ்வூர், ஆடானை எனப்படுகிறது. 
 
சுந்தரபாண்டியன் காலத்தில் கோயிலுக்கு நெல் தானமாக வழங்கப்பட்டுள்ளது
 
இக்கோயிலில் பாண்டியர், சேதுபதிகள் கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கோயிலுக்கு நெல் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கி.பி.1636-ல், தளவாய் சேதுபதியின் பிரதிநிதி திருமலையன், கோயிலுக்குரிய கிராமங்களில் உள்ளவர்கள், ஒரு காசு, ஒரு பணம், ஒரு கலம் நெல்லு சுவாமிக்குக் கொடுக்கவேண்டும் என கட்டளையிட்டுள்ளார். இதைக் கொடுக்காமல் இருக்க கைகூலி வாங்குகிறவன், பெண்டாட்டியும், உடப்பிறந்தான் மகளையும், மருமகளையும் எதிரியுடன் கூட்டிக்குடுத்த பாவத்துக்கு ஆளாவார்கள் என கல்வெட்டு எச்சரிக்கிறது. 
 
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 50 வரலாற்று ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
 
இயற்கைத் துறைமுகங்கள், நெல் விளைச்சல், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, பாதுகாப்பான வணிகப் பாதைகள் ஆகிய காரணங்களால் 2500 ஆண்டுகளாக வெளிநாட்டு, உள்நாட்டு வணிகர், வணிகக் குழுக்கள் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளனர் என்றார். பின்பு தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, மாரியூர், திருமாலுகந்தான் கோட்டை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட உள்ளனர். இதில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 50 வரலாற்று ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
 

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Embed widget