காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
மக்காச்சோள பயிர்களை விளை நிலங்களில் அருகில் உள்ள புதர்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி உள்ளது.
மதுரை பேரையூர் அருகே காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை உரிய கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
வனத்துறையினர் மூலம் காட்டுப் பன்றியை கட்டுப்படுத்தவும், உரிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்புகளை உடனடியாக வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
காட்டுப்பன்றிகள் தொல்லை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி, பேரையூர் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடப்பாண்டில் சுமார் 50,000 ஏக்கரில் மக்காச்சோள சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த மக்காச்சோளங்கள் கதிராக விளைந்துள்ளது. இந்நிலையில், மக்காச்சோள பயிர்களை விளை நிலங்களில் அருகில் உள்ள புதர்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி உள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டும், காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதம் அடைந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் இன்னும் சில நாட்களில் மக்காச்சோளம் அறுவடை செய்யப்படும் நிலையில், காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் மன உளைச்சலுக்கும் தாங்க முடியாத பெரும் நஷ்டத்திற்கும் உள்ளாகிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் வனத்துறையினர் மூலம் காட்டுப் பன்றியை கட்டுப்படுத்தவும், உரிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்புகளை உடனடியாக வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அடிப்படை பிரச்னைகள்
அதனைத் தொடர்ந்து மற்றொரு கடிதத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் செளடார்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரெட்டிப்பட்டி கிராமத்திற்கு ஆண்டிப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் இணைக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகப்படவில்லை என கிராம மக்கள் வேதனையின் தெரிவிக்கின்றனர். மேலும் கிராமத்தில் மின்விளக்கு வசதிகள் செய்யப்படவில்லை முறையாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். ஆகவே இதை இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் உள்ள கற்பக நகர், காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் முழுவதும் குண்டு குழியுமாக உள்ளது. தொடர்மழைகளால் சாலை முழுவதும் தண்ணீராக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டும் ஆபத்து உள்ளது ஆகவே இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!