மேலும் அறிய
சிறையில் மாரிதாஸ்... வீட்டில் கடல் நீர்... டிரைவருக்கு போக்சோ... மதுரை மண்டலத்தின் முக்கிய செய்திகள்!
தமிழ்நாடு முதல்வர் எவ்வளவு பணிபுரிய முடியுமோ அதையும் தாண்டி பணியாற்றிவருகிறார் - நீதிபதி புகழேந்தி பாராட்டு.
1. மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாசுக்கு 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டுள்ளது.
2. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள தெற்கு வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமு மகன் மகராஜா (36). லாரி டிரைவர். 14வயது சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் தெரியவரவே சிறுமியின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, மகராஜாவை கைது செய்தார்.
3. சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை சராசரியாக இருக்கும் வகையில் மறுவரையறை செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
4.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கானபட்டி யலை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி வெளியிட்டார். சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகளில் 82,813 ஆண்கள், 86,853 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,69,676 வாக்காளர்கள் உள்ளனர். 11 பேரூராட்சிகளில் 66,668 ஆண்கள், 70,404 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,37,074 வாக்காளர்கள் உள்ளனர்.
5.நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 342 பேரும் பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 72 ஆயிரத்து 957 பேரும், இதர பாலினத்தவர்கள் 49 பேர் என மொத்தம் ஏழு லட்சத்து 28 ஆயிரத்து 348 பேர் உள்ளனர், நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்காக 902 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
6. நெல்லை புதிய பேருந்து நிலைய கடைகள் மூலம் மாநகராட்சிக்கு சுமார் 5.68 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக கமிஷனர் விஷ்ணு சந்திரன் தெரிவித்து உள்ளார்.
7. நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நிர்வாக காரணங்களினால் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்
8. தமிழ்நாடு முதல்வர் எவ்வளவு பணிபுரிய முடியுமோ அதையும் தாண்டி பணியாற்றிவருகிறார் - நீதிபதி புகழேந்தி பாராட்டு. இதை பாராட்டவிட்டாலும் பரவாயில்லை மைக் கிடைத்தது என்பதற்காக முதல்வரை அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.- உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி கருத்து.
9. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு கடந்த 2016ம் ஆண்டு கோயம்புத் தூரைச் சேர்ந்த உபயதாரர் மூலம் குதிரை ஒன்று வழங்கப்பட்டது. இந்த குதிரைக்கு தற்போது 6 வயதாகிறது. கடந்த சில வாரங்களாகவே அதற்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை கால்நடை மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குதிரை இறந்தது.
10.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் நேற்று வழக்கத்தை விட அதிகமாக கடல் சீற்றம் காணப்பட்டது. இதன் காரணமாக தொண்டி புதுக்குடி பகுதியில் கடல்நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தன. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த தண்ணீர் மீண்டும் கடலுக்குள் திரும்பி சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், அதிகாலை 3 மணியளவில் கடலில் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பயங்கர சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது கடலில் ஒரு மாற்றம் தெரிந்தது. உடனே வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி கொண்டும் உடைமைகளை எடுத்துக் கொண்டும் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று விட்டோம். நேரம் ஆக, ஆக கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விட்டது என தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion