மேலும் அறிய
Advertisement
கண்டிப்பாக தைரியமா பேசலாம் நானும் உங்க கட்சி தான் - மாணவிகள் மத்தியில் பேசிய ஆர்.பி.உதயகுமார்
”தகவல்கள் சரியாக பரிமாறப்பட வேண்டும் இல்லை என்றால் தகவல் போய் சேருவது வேறொன்றா இருந்துவிடும்” - ஆர்.பி.உதயகுமார்
மத்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் மதுரை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு இந்நிகழ்வினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது..." இளைஞர்கள் தன்னலம் கருதாமல் சமூகத்தில் சேவை செய்ய முன்வர வேண்டும்.
இங்கு பெண்கள் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். அதனால் மதுரை என்றாலே நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்சது ஒன்னு தான். "சொக்கநாதர் இருந்தாலும் மீனாட்சி ஆட்சி தான் நடைபெறும்". நானும் உங்க கட்சி தான். வெர்பல் - நான் வெர்பல் என்று உள்ளது. வெர்பல் என்றால் பேசியதை பிறருக்கு செய்தியாக கடத்துவது. நான் வெர்பல் என்றால் சைகை மூலம் தகவலை கடத்துவது. எதுவாக இருந்தாலும் சரியான முறையில் தகவல் பரிமாற்றப்பட வேண்டும். இல்லை என்றால் நாம் சொல்வது ஒன்று தகவல் போய் சேருவது வேறொன்றாக இருந்துவிடும். எனவே தகவலை சரியாக பரிமாற வேண்டும். பெண்கள் நீங்கள் இல்லாமல் எந்த துறையும் இல்லை. அதே போல எனக்கு முன் பேசியவர்கள் கூட சொன்னாங்க "நம்ம தைரியமாக பேசலாம், ஏன்னா இங்க பெண்கள் தான் மெஜாரிட்டி" என்று கூறினார்கள். கண்டிப்பாக தைரியமா பேசலாம் நானும் உங்க கட்சி தான்" என்று நம்பிக்கையாக பேசினார்.
தொடர்ந்து மாதிரி இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் மாணவிகள் ஆளும் கட்சி - எதிர் கட்சி என இரு அணிகளாக கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சியில் சபாநாயகராக, கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் மக்கள் பிரச்னை குறித்து அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையுடன் ஆர்.பி.உதயகுமார் எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சண்முகப்பிரியா, சேர்மத்தாய் வாசன் கல்லூரியின் முதல்வர் கவிதா, மாவட்ட முதன்மை வங்கி அதிகாரி திரு அணில், ஃபேமிலி பிளானிங் அசோசியேசன் ஆப் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிபா, அசிஷ்டண்ட் இன்ஜினியர் cpwd திரு.தனசேகரன், அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - அண்ணாமலை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இனி 6 வயதுக்கு மேல்தான் 1ஆம் வகுப்பு: அரசுப்பள்ளி, சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion