மேலும் அறிய

மின்சார தேவை அதிகரிப்பு - மாற்று வழியை உருவாக்க பொதுமக்கள் கோரிக்கை!

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் மின்சார தேவையை போக்க, அதிக அளவிலான காற்றாலை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது . தேனி மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கம் , மீண்டும் ரயில் சேவை , வளர்ந்து வரும் மின்சாதன பொருள்களின் வணிகம் , பள்ளிகளில்   டிஜிட்டல் முறையிலான வகுப்புகள், வீடுகளில்  மின்சார பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தேனி மாவட்டத்தில்  கூடுதல் மின் தேவை ஏற்பட்டுள்ளது . தேனி மாவட்டத்தில் பெரியாறு மின்நிலையம், சுருளியாறு நீர்மின்நிலையம் மற்றும் மைக்ரோ பவர் ஸ்டேஷன்களில் மின் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவைகளில் அனைத்து நேரங்களிலும்  ஒரே மாதிரியான உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால் ஏற்படும் மின் தேவையை ஈடுகட்ட   தேனி மாவட்டத்திலுள்ள காற்றாலைகள் பெரும் பங்காற்றுகிறது எனலாம் .

மின்சார தேவை அதிகரிப்பு - மாற்று வழியை உருவாக்க பொதுமக்கள் கோரிக்கை!
காற்றாலை என்பது, காற்றால் உந்தப்படும் ஆற்றலை உற்பத்தி செய்யும் பொறி ஆகும். காற்று வீசினால் ஏற்படக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பொறி அமைக்கப்பட்டு, காற்று விசைச் சுற்றுக் கலன்களில் இருந்து பெறப்படும் இயந்திர ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கி இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான காற்றாலை மின்சாரம், சுற்றுச்சூழலை சீரழிக்காத பசுமை ஆற்றலாகக் கருதப்படுகிறது. இதனால் இந்தியாவில் அதிக அளவில் காற்றாலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மின்சார தேவை அதிகரிப்பு - மாற்று வழியை உருவாக்க பொதுமக்கள் கோரிக்கை!

இந்தியாவின் காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55% பங்கு பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்த காற்றாலை மூலம் தமிழ்நாட்டின் மின் தேவைகளில் 20% அளவை நிறைவு செய்கிறது. அதிகமாக காற்று வீசும் பட்சத்தில் ஒரு காற்றாலையில் அதிகபட்சமாக அதன் உற்பத்தி திறனை பொறுத்து ஒரு நாளைக்கு 38 ஆயிரம் யூனிட் வரையில் மின்சார உற்பத்தி செய்ய முடியும்.

தமிழகத்தில் திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக  தேனி மாவட்டத்தில் அதிக அளவில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர்,போடி, நாகலாபுரம், ஆத்தங்கரைப்பட்டி, மரிக்குண்டு, தேக்கம்பட்டி ராசிங்காபுரம், சங்கராபுரம், ஒவுலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன . பொதுவாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கும். தற்போது காற்றாலையில் 7000 முதல் 8000 யூனிட் வரை மின்சாரம்  உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . 

மின்சார தேவை அதிகரிப்பு - மாற்று வழியை உருவாக்க பொதுமக்கள் கோரிக்கை!

தேனி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இருந்தாலும் , தென்மேற்குப் பருவக் காற்று அதிகமாக வீசக் கூடிய பகுதியான கம்பம் பள்ளத்தாக்கில் மிகக் குறைவான அளவிலேயே காற்றாலைகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் கூடுதலான காற்றாலைகள் அமைக்கப்பட்டால், தினமும் 40 ஆயிரம் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். 

தற்போது தேனி மாவட்டத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க  கம்பம் பள்ளத்தாக்கில் காற்றாலை அமைக்க கூடிய இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து, அதிக அளவில் காற்றாலை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்தால் , மாவட்டத்திற்கு தேவையான  மின்சாரம் முழுமையான அளவில் கிடைக்கும் என கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள்  கூறி வருகின்றனர்.  இதனால்  அதிகாரிகள் ஆய்வு காற்றாலைகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget