மேலும் அறிய

''சசிகலா தாய் அல்ல பேய்'' - மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பொரிந்துதள்ளிய நத்தம் விசுவநாதன்

திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சசிகலா தாய் அல்லவே அவர் ஒரு பேய் எனக்கூறினார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா தாய் அல்ல அவர் ஒரு பேய் என முன்னாள் அமைச்சர் விசுவநாதன் கூறினார்.

திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் சசிகலாவிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது அவரிடம் யாரும் பேசக்கூடாது அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி, நத்தம் ஒன்றிய தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது

'சசிகலா தாய் அல்ல பேய்'' - மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பொரிந்துதள்ளிய நத்தம் விசுவநாதன்

சசிகலா கட்சியின் உறுப்பினரே கிடையாது. அவர் செயல்பாடு வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை பொருத்தவரை இரட்டை குழல் துப்பாக்கி போல் இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளனர். கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி கெளரவமான தோல்வி. இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான தோல்வி தான். ஆனால் அருமையான தலைமையில் அதிமுக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த சசிகலா முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். சசிகலாவை  ஜெயலலிதாவே நீக்கினார்.

அதிமுக கட்சி வலிமையாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. அதற்கு காரணம் சசிகலா தான். ஜெயலலிதாவிற்கு நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை நம்பினார்.

'சசிகலா தாய் அல்ல பேய்'' - மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பொரிந்துதள்ளிய நத்தம் விசுவநாதன்

 ஆனால் அவர் நம்பிக்கையாக நடக்கவில்லை. துரோகம் தான் செய்தார். ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியும். சசிகலாவின் உறவினர்கள்தான் கட்சி அதிகாரம் செலுத்தினார்கள். தற்போது கட்சி நல்ல வழியில் சென்று கொண்டிருக்கிறது. சசிகலா  குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சசிகலா தன்னை தாய் என்று கூறிக் கொள்கிறார். அதிமுகவை பொருத்தவரை அவர் தாயல்லவே அவர் ஒரு பேய். இந்த சலசலப்புக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள். அதிமுகவினர் யாரும் திண்டுக்கல் மாவட்டத்தில் சசிகலாவிடம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. சில பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சில மாயை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மாயைய்  உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக தொண்டர்கள் யாருக்கும் ஒருபோதும் விலை போகமாட்டார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், திமுகவும் தான் என்பது அப்பட்டமான உண்மை. அதிமுக ஆரம்பத்திலிருந்து  நீட் தேர்வு எதிர்த்துக் கொண்டுதான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

FQL ஆப் மோசடி: சிபிஐ விசாரணை கோரிக்கை; உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
FQL ஆப் மோசடி: சிபிஐ விசாரணை கோரிக்கை; உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
பழனி ரூ.100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் பெண் ஊழியர், வழக்கறிஞர் கைது!
பழனி ரூ.100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் பெண் ஊழியர், வழக்கறிஞர் கைது!
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget