மேலும் அறிய
மதுரையில் 10 தொகுதியையும் தட்டித் தூக்குவோம்.. அமைச்சர் மூர்த்தி தொண்டர்களிடம் நெகிழ்ச்சி !
கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று நினைத்தோமோ, இன்றைக்கு நிச்சயமாக அதனை நடத்தி காண்பித்து இருக்கிறீர்கள் - அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் பி.மூர்த்தி
Source : whats app
நிச்சயமாக எது எப்படியாக இருந்தாலும் இன்றைக்கு நாங்கள் இருக்கக்கூடிய இந்த 10 தொகுதிகளையும் வெற்றி பெறுவதற்கான பணியை நாம் துவக்கி இருக்கிறோம் என்று திமுக மதுரை வடக்கு மாவட்டம், மதுரை மேற்கு தொகுதி விளாங்குடி கலைஞர் திடலில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி
”20 ஆண்டுகாலத்திற்கு மேலாக நாம் இந்த தொகுதியை வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் உள்ளாட்சி 30% குறைவாகவும் பெற்றிருக்கிறோம், என்று சொன்னார்கள். இதற்கு பின்னால் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிகம் பெற்றிருந்தாலும் நிச்சயமாக இந்த இருக்கக்கூடிய இந்த மேற்கு தொகுதியில் கூட்டம் அதுவும் மேற்கு தொகுதியில் இருக்கிறவர்களுக்கு மட்டும் இந்த பொது உறுப்பினர் கூட்டத்தை கூட்டுகின்றோம். இந்த கூட்டத்தில் பொது உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற அமைச்சர் சொன்னதை போல ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சி வேண்டும். 2021 50% வெற்றி பெற்று இருக்கிறோம். இந்த கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று நினைத்தோமோ, இன்றைக்கு நிச்சயமாக அதனை நடத்தி காண்பித்து இருக்கிறீர்கள்.
மேற்கு தொகுதியில் பணி
எங்களுடைய இலக்கு மதுரை மாவட்டத்தினுடைய இன்றைக்கு தென் மாவட்டத்திலே மதுரை மாவட்டம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 10 தொகுதியை வெற்றி பெற்று அதிலேயே மேற்கு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்ற தொகுதியாக நாம் எல்லோரும் சேர்ந்து உருவாக்குவோம். என்று எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. இன்றைக்கு பொது உறுப்பினர் கூட்டம் ஒரு மண்டலத்தில் நடத்துவோம் அதுலயும் மாவட்ட கழக கூட்டமாக நடத்துவோம். ஒரு கூட்டமாக நடத்தி இருக்கிறோம். மிகப்பெரிய அளவில இருக்கிறோம்.
சிறப்பான ஒத்துழைப்பு
நீங்கள் எல்லாம் முழு ஒத்துழைப்போடு இன்னைக்கு உறுப்பினர்களையும் மதித்து முன்னாள் பொறுப்பாளர்களாக வட்ட செயலாளர் இருந்தாலும், அவர்களையும் அழைத்து இன்றைக்கு இந்த கூட்டத்தை நாம் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம்., என்று சொன்னால் இந்த பணி மேலும் தொடரும். அதற்கு முன்னோடியாகத்தான் வரக்கூடிய 28ஆம் தேதி இந்த மேற்கு தொகுதியினுடைய என்னென்ன அடிப்படை தேவைகள் செய்ய வேண்டும். 22 வார்டுகள் இருக்கிறது, ஒரு பேரூராட்சி இருக்கிறது. ஏழு பஞ்சாயத்து இருக்கிறது. அதற்கான பணிகளை செய்வதற்கான ஆய்வு கூட்டத்தை 28ஆம் தேதி எம்.எஸ் மகாலில் நடத்த இருக்கிறோம்.
வெற்றி பெறுவதற்கான பணியை தாங்கள் துவக்கி இருக்கிறோம்
நம்முடைய மாநகராட்சியாக இருந்தாலும் மாவட்டமாக இருந்தாலும் அவர்களுடைய பரிந்துரைகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுநிச்சயமாக அந்த பணிகளை செய்வதற்கு முன்னாடி தொண்டனாக உங்களோடு, கலந்து அந்த பணியை செய்வதற்கு இருப்பேன் என்று இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன். நிச்சயமாக எது எப்படியாக இருந்தாலும் இன்றைக்கு நாங்கள் இருக்கக்கூடிய இந்த 10 தொகுதிகளையும் வெற்றி பெறுவதற்கான பணியை நாம் துவக்கி இருக்கிறோம்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - விபத்தால் அரசியலுக்கு வந்தவன், விரும்பி வரவில்லை.. சக்திக்கு மீறி செயல்பட முயற்சிப்பேன் - துரை வைகோ ஓபன் டாக் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மதுரை எய்ம்ஸ் பணி எவ்வளவு முடிஞ்சிருக்கு தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















