watch video | “மகன் இறந்துட்டான்னு உட்கார முடியுமா? என் புருஷன் குடியை விட்டுட்டா பராவல” - தச்சு வேலையில் அசத்தும் மல்லிகா!
பெண்கள் எல்லா தொழிலும் நிரம்ப ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க எல்லோரும் தொழில இஷ்டப்பட்டு தான் செய்றாங்கனு சொல்லிட முடியாது. மல்லிகா போன்ற பெண்கள் வீட்டின் கஷ்டங்களுக்காக வேலை செய்றாங்க என்பது தான் நிதர்சனம்.
" பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு.....! அழகே பொன்னுமணி, சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்" என்று ரேடியோவில் கிழக்கு வாசல் திரைப்பட பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. களைப்பை நீக்கியபடி தச்சுவேலையில் மும்மரம் காட்டினார் மல்லிகா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சுற்றியபோது பெண் ஒருவர் தச்சுவேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து வண்டியை நிறுத்தினோம். கதவுக்கு அன்னம் டிசைன் போட்டுக் கொண்டிருந்த மல்லிகா அக்காவிடம் பேசினோம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் மல்லிகா, நமது #Abpnadu இணைய செய்திக்காக தேடலின் போது கண்ணில் சிக்கினார். அவரின் உழைப்பிற்கு பின்னால் பல்வேறு வேதனை இருப்பது அவரிடம் பேசிய பின்பு தான் தெரிந்தது. முழு தகவல் - abpயில். . .
— Arunchinna (@iamarunchinna) January 31, 2022
| #Abpnadu | #sivaganga | #women | #manamadurai |. pic.twitter.com/koIItbKobF