மேலும் அறிய
மதுரையில் அதிர்ச்சி.. பெண்கள் விடுதியில் வெடித்த பிரிட்ஜ் - 2 பேர் உயிரிழந்த சோகம்
பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து, இரு பெண்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு, மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி, ஏராளமான பெண்களின் சான்றிதழ்கள் தீயில் கருகி சேதம்.

விசாகா பெண்கள் விடுதி
Source : whats app
விடுதி உரிமையாளிடம் காவல்துறை விசாரணை
மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி என்ற விடுதி கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்தும் படித்தும் வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இந்நிலையில் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் புகை வெளியே வந்த விடுதிக்குள் சென்ற தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பெண்கள் உயிரிழந்த சோகம்
இந்நிலையில், விடுதியில் இருந்த பிரீட்ஜ் வெடித்து அதில் உள்ள சிலிண்டர் வாயு வெளியேறியபோது, நச்சுப் புகையால் 5 பேர் மயங்கி விழுந்ததனர். இதில் பரிமளா என்ற ஆசிரியையும், சரண்யா என்பவரும் உயிரிழந்தனர். விடுதி்வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்த இருவரின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது
விதி மீறி செயல்பட்ட விடுதி
முதற்கட்டமாக பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திடீர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த பெண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ள கட்டிடத்தில் உரிமையாளர் பேசியபோது ஏற்கனவே பல ஆண்டுகளாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பழமையான கட்டிடம் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் அந்த நோட்டீசை விடுதி உரிமையாளரிடம் வழங்கியதாகவும், ஆனாலும் தொடர்ந்து விடுதி செயல்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டுகிறார். மேலும் விடுதிக்கான எந்தவித அனுமதியும் பெறாமல் இதுபோன்று விடுதி நடத்தியதாக கட்டிட உரிமையாளர் தெரிவித்துள்ள நிலையில் தீ விபத்து நடைபெற்ற இடத்தில் கோட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கருகிய கல்விச் சான்றுகள்
தீ விபத்தில் பல்வேறு பெண்களுடைய கல்விச் சான்றுகள் முழுவதுமாக எரிந்து கருகியதால் அவர்கள் சான்றிதழ்களை இழந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதிகாலை 4 மணி என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, விபத்து ஏற்பட்டதால் பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் அங்குள்ள தங்கு விடுதியில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழலில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவசர கால பாதை உள்ளிட்டவைகள் எதுவும் இல்லாமல் சிறைச்சாலை போன்று செயல்பட்டுவந்துள்ளது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் உரிய எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையிலும், அதனை அலட்சியமாக இது போன்ற விபத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விடுதி நிர்வாகத்திடம் விசாரணை
இந்நிலையில் இந்த பெண்கள் விடுதியில் உரிமையாளரான இன்பா என்ற பெண்ணை திடீர்நகர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துசென்றுள்ளனர். இந்த பெண்கள் விடுதியில் வார்டனாக புஷ்பாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விடுதியில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை பெறுவதில் காவல்துறையினருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விடுதியில் 45க்கும் மேற்பட்டோர் பேர் தங்கி இருந்த நிலையில் தீபத்தை ஏற்பட்ட போது 28 பேர் விடுதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
வணிகம்
உலகம்
Advertisement
Advertisement