மேலும் அறிய
தூய்மைப் பணியாளர் விவகாரம்: அதிமுக-வை சாடிய திருமாவளவன்
ஏன் அதிமுக ஆட்சியில் தூய்மைப்பணி தனியார் மயப்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் தூய்மை பணியாளர்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

திருமாவளவன்
Source : whats app
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் இதில் அமைதியாக இருந்து விடுவோமா?- தூய்மை பணியாளர்களை தனியார்மயப்படுத்தியதே அ.தி.மு.க., தான்- எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றி பேசுவாரா திருமாவளவன் பேட்டி.
ஆர்.எஸ்.எஸ்.., அமைப்பை பாராட்டி பேசுவது ஏற்புடையதல்ல
மதுரையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில்..,” வரி குறைப்பு என்ற பிரதமர் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜி.எஸ்.டி., முறையை முற்றிலும் கைவிட வேண்டும். இந்த அறிவிப்பு தேர்தலுக்காக இருந்தாலும் வரவேற்கலாம். ஆர்.எஸ்.எஸ்ஸை சுகந்திர தின விழாவில் பாராட்டுவது ஏற்புடையதுஅல்ல. இந்து பெரும்பான்மை பேசி மக்களை பிரிக்கும் அமைப்பு. பிரதமர் ஒரு ஆர்.எஸ்.எஸ்., தயாரிப்பு. அதனால் அவர் அப்படித்தான் பேசுவார். சுதந்திர தினவிழாவில் பாரட்டிப் பேசுவது ஏற்புடையதல்ல.
தூய்மை பணியாளர் பிரச்னை குறித்த கேள்விக்கு
தூய்மைப் பணியாளர்கள் பிரச்னைக்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்திருக்கிறோம். தனியார் மயப்படுத்துவதை தீவரமடைகிறது. இதனை எதிர்க்க வேண்டும், இதற்கு எதிராக போராடிய தோழர்களோடு பேசினேன். அனைத்து தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. தூய்மை பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழிசை குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு
அவர்களெல்லாம் தாமதமாக போராட்டத்திற்கு சென்றவர்கள். நான் போராட்டம் தொடங்கிய நான்காவது நாள் அவர்களை சந்தித்தேன். முதலமைச்சரிடம் பேசினேன். துறை சார்ந்த அமைச்சர்களிடம் பேசினேன். அவர்களோடு தொடர்பிலேயே இருந்தேன். நான் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, முதலமைச்சர் ஆகியோரை சந்தித்தும் தொடர்புடைய அரசு அதிகாரிகளை சந்தித்தும் பேசினேன். ஏதோ சில நிமிடங்கள் சந்தித்தவர்கள் எங்களை விமர்சிப்பது வேடிக்கையானது. தூய்மை பணியாளர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது. தூய்மை பணியாளர் பிரச்சனை என்பதை விட, இதை வைத்து திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.
எடப்பாடி எப்போது பேசினார் தெரியுமா?
தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்வது முதன்மை கோரிக்கையாக இருக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் தலித்துகளாக இருக்கிறார்கள். அதனால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என சொல்வதே சரியாக இருக்காது. எல்லோரும் இந்த பிரச்சனையை பேச வேண்டும். ஏன் 13 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தவில்லை. கடைசியாக கைது செய்யப்பட்ட போதுதான் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஏன் அதிமுக ஆட்சியில் தூய்மைப்பணி தனியார் மயப்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் தூய்மை பணியாளர்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். முதன் முதலில் அரசாணை 152 ஐ அமல்படுத்தியது அதிமுக தான். தனியார் வசம் தூய்மை பணியை ஒப்படைத்ததே அதிமுக தான். இதை திமுகவுக்கு ஆதரவாக சொல்லவில்லை உண்மையை சொல்லுகிறேன். ஏன் இப்போது போராட்டம் நடத்துபவர்கள் அதிமுக தனியார் மயப்படுத்தியதைப் பற்றி பேசவில்லை.
காலம் அவரை மக்களைச் சந்திக்க வைக்கும்
அதிமுக செய்தால் அமைதியாக இருக்க வேண்டும். திமுக செய்தால் எதிர்க்க வேண்டும் என்ன அரசியல் இது. இதுதான் அணுகுமுறையா. திமுக கூட்டணியில் இருப்பதால் இதில் அமைதியாக இருந்து விடுவோமா. எங்களைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தூய்மை பணியாளர் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எடுத்துச் சொல்கிறோம் கோரிக்கை விடுக்கிறோம்.
விஜய் பனையூரில் தூய்மை பணியாளர்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு,
அவர் புதிய அணுகுமுறையை கையாளுகிறார் காலம் அவரை மக்களைச் சந்திக்க வைக்கும் என பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















