மேலும் அறிய
ஐந்து நபர்களுடன் தண்ணீரில் மூழ்கிய கார் காப்பாற்றிய ஓட்டுநர் !
’’5 பேருடன் நீரில் சிக்கிய காரை மீட்ட மற்றொரு வாகன ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்’’
மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நோக்கி இனோவா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. லாடனேந்தல் அருகே உள்ள மாரநாட்டு கால்வாயில் முழு அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்த சமயத்தில் நிலை தடுமாறிய அந்த கார் இறங்கியது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் வண்டியோடு தண்ணீரில் தத்தளித்த 3 பெரியவர்கள், 2 குழந்தைகளையும் தண்ணீரில் குதித்து தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றானர். இந்த செயல் பலரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. இதனால் முத்துக்கிருஷ்ணனுக்கு பலரும் முகநூலில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முத்துக் கிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், எனக்கு சொந்த ஊர் திருப்புவனம் மதுரையில் ஓட்டுநராக வேலை செய்கிறேன். வேலை விசயமாக காரில் ராமநாதபுரம் வரைக்கும் சென்று கொண்டிருந்தோம். அப்போது மாரநாடு கால்காய் அருகே வேகமாக வந்த கார் மாயமானது. வண்டியை நிறுத்தி பார்க்கும் போது தான் கால்வாய்க்குள் விழுந்தது தெரியவந்தது. காரில் 2 குழந்தைகள் ஒரு பெண், முதியவர் என மொத்தம் 5 நபர்கள் இருந்தனர். இதனால் தண்ணீரில் குதித்து அனைவரையும் காப்பாற்றினேன். அவர்களை உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டோம். தற்போது அவர்களிடம் பேசினேன், அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்" என நம்மிடம் தெரிவித்தார்.
காரில் மூழ்கிய இனோவா காரில் இருந்து குழந்தைகள், முதியவர் உட்பட 5 நபர்களின் உயிரை மற்றொரு வாகன ஓட்டுநர் காப்பாற்றிய செயல் பாராட்டைப்பெற்றுள்ளது.
#BREAKING | தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை
— ABP Nadu (@abpnadu) November 9, 2021
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் #TNRains | #Rain | #WeatherUpdate | #ChennaiRains
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion