மேலும் அறிய

லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!

ஊரடங்கில் பல தொழில்கள் முடங்கியிருக்கு. அந்த தொழில்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் கடந்த காலங்களில் அவர்களுக்கு கிடைத்த சுவாரஸ்ய அனுபவங்களையும் தூசுதட்டுகிறது ABP நாடு.

வெளியூர் பயணத்தில் தொண்டர்களை கூட திரும்பிப் பார்க்காத ஜெயலலிதா, மைக் செட் ஆபரேட்டர்களுக்கு வாழ்த்து கூறியது ஏன்? மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் இந்த மைக் செட் ஆபரேட்டர்கள் யார்? அது தான் இன்றைய லாக்டவுன் ஸ்டோரின் பிரதானம். அதை அவர்களின் ஸ்லாங்கில் சொல்வது தான் இன்னும் சுவாரஸ்யம்.
 
லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!
மதுரே....., குலுங்க, குலுங்க நீ நையாண்டி பாட்டுப் பாடு. புழுதி பறக்க பறக்க நீ போடாத ஆட்டம் போடு"  இப்படி போற போக்கில்  அடையாளங்கள, வட்டார வழக்க ஓங்கி வெடிக்க செய்யும் பாடல்களை மதுரைக்காரங்கநாலதான் தேடி பிடிச்சு பாட்டு போடமுடியும்., என நிரூபிக்கும் வகையில் மதுரையில் நடத்தப்படும் விழாக்களில் தெறிக்க விடுவார்கள். 'ஒலி பெருக்கி ஆப்ரேட்டர்கள்' .  'மருமகளே மருமகளே..... வா...,வா..., உன் வலது காலை எடுத்துவைத்து  வா....,வா" என்ற பாடல் ஒலித்தால். மணப்பெண் புகுந்த வீட்டுக்கு முதல் முறையாக கால் எடுத்து வைக்கப்போறானு அர்த்தம்  பாடலை போட்டு மணப்பெண்ணை உணர்ச்சி பொங்க வைப்பார்கள். "மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே" சாங் போட்டா தாய்மாமன் சீர் வருகிறது என்று அர்த்தம்.

லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!
 
இதனால் போட்டோகிராபர் முதல் ஆரத்தி தட்டு எடுக்கும் குமரி பெண்கள் வரைக்கும் இந்த பாடல்கள் தான் விசேஷ வீட்டிற்கு அலாரம். சித்திரைத் திருவிழா வந்தால் போதும் "வாராரு.... வாராரு அழகரு வாராரு" என்ற பாடலை போட்டு புல்லரிக்க  செய்வார்கள். 90 கிட்ஸ்கள் வரை மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் தான் இந்த ரேடியா செட். தற்போது 'டூகே' கிட்ஸ்கள் நவீன ஆண்ராய்டு காலத்தில் சற்று மதிப்பு குறைந்துவருவதாக மைக் செட் ஆப்ரேட்டர்கள் கருதுகிறார்கள். தல அஜித்னாலும், தளபதி விஜய்னாலும் இப்படி எந்த ரசிகர் பட்டாளம்னாலும்  மிகப்பெரும் ஆர்பரிப்பு குழாய் பாட்டுகள் தான். ஏரியாவை அதிரவைத்து  குழாய் சவுண்டு சர்வீஸ் பட்டய கிளப்பும். ஏரியாவில் பாட்டு சத்தம் கேட்டாலே பட்டறை போட்டு  பாட்டு கேக்கும் கூட்டமும் இருந்தது. அன்று முழுதும் மதுரை காரங்களுக்கு விசேஷ வீடு தான் டாப்பு. மைக்செட் இல்லாட்டி விசேஷம் முழுமை அடையாது. பிற ஊர்களில் எப்படியோ மதுரையில் கறிசோறு வாசனைக்கு முன்னாடி பாட்டு சத்தம் தான் முக்கியம்.

லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!
விசேஷ வீட்டில் ஏற்படும் பல சண்டைகளை ரேடியா செட்டு தான் தீர்த்து வைக்கும். ஸ்பீக்கர் சத்தத்தில் தேவையற்ற சண்ட சச்சரவை தடுக்கும். பரபரப்பாக வேலை செய்ய தூண்டும். பக்கத்து ஊர்க் காரங்களுக்கு விசேஷம் நடக்கும் சேதிய கொண்டு போகும். புதுசா வீட்டுக்கு வர்றவங்களுக்கு இந்த பக்கம் தான் பாட்டு படிக்குது என்று அட்ரஸ் கொடுத்து பாட்டு சத்தத்தால் கூட்டிவரும். இப்படியாப்பட்ட அலப்பறை மைக் செட் காரார்களை மதுரையில் தான் காண முடியும். உசிலம்பட்டி, மேலூர், திருப்பரங்குன்றம், செல்லூர், ஊமச்சிகுளம், ஜெய்ந்திபுரம், வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, திருமங்கலம் என மதுரை மூலை முடுக்கெல்லாம்  விசேஷத்திற்கு பாட்டு  தான் கலகட்டும். என்ன தான் கூம்பு குழாய்களுக்கு தடை போட்டாலும், இவங்க பாட்டுபோடுற ஊருக்கெல்லாம் அதிகாரிகளே கால் வைக்க முடியாது. அந்த அளவிற்கு குக்கிராமங்கள் தான் அதிகம். அப்புறம் எங்கே கண்காணிக்கிறது. தற்போது கொரோனா காலகட்டத்தில் எந்த அலப்பறையும் இல்லாம இருக்கு, சரி பாட்டு தான் கேட்க முடியல அவங்க அனுபவத்தையாவது கேட்கலாம்னு காது குடுத்தோம். 

லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!
உசிலம்பட்டியை சேர்ந்த ரேடியா செட் உரிமையாளர் ராஜ்குமார் கூறுகையில்..., " நான் மூனாவது தலைமுறையா செட்டு போடுகிறேன். ஒளி, ஒலி அமைப்பில் உசிலம்பட்டியில் சிறப்பா செய்வோம்ல. கல்யாணம், காதுகுத்து, கருமாதிவரைக்கும் எல்லா இடத்திலும் செட்டுபோடுவோம். நான் 2006- ல் இருந்து முழுசா செட்டுபோடுறதுல சேர்ந்துட்டே. எங்க சியான், அப்பா, அண்ணன் எல்லோருக்கும் ரேடியா செட்டு தொழிலுதே. ஓல்டுமாடல் ரேடியா செட்டு பொருளுபூரா  எங்கள்ட இருக்குப்பு. பொதுவாவே உசிலம்பட்டில கருமாதியவே திருவிழா கணக்கா.., பெருசா கொண்டாடுவாங்க. அதனால கேதவீட்லதே  அதிக வேலை இருக்கும். மதயானை கூட்டம் படம்,  விஜய் சேதுபதி மக்க கலங்குதப்பா பாட்டு இப்புடி நெறைய படத்துல  உசிலம்பட்டியோட உண்மையான கேத வீட்டை காட்டி இருப்பாங்க. அப்படி தான் உசிலம்பட்டி பக்கம் செட்டு போடுவதில் அலப்பறை இருக்கும். "வீடு வரை உறவு...., வீதி வரை மனைவி.." இப்படியான சாங்கா கேதத்திற்கு தேர்வு பண்ணி வச்சுருப்போம். கேத வீட்டுக்காரங்களுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி இருக்கும், நாங்க போடுற பாட்டு.
லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!
 
அது போலயும் கோயில் திருவிழாவிற்கு சும்மா சொல்லக்கூடாது உசிலம்பட்டி செட்டு ரெங்கும். பெரிய எழுத்து குழாய், சின்ன எழுத்து குழாய் கிராம்பியர் குழாய், காவடி குழாய், காவடி முயல் காது குழாய், பால்கர் குழாய் என்று குழாயில் பல ஐட்டம் வச்சுருக்கோம். அதே போல ஸ்பீக்கருக்கும் முக்கியதுவம் கொடுப்போம். அதை நேரடியாக கடையில் வாங்குறதில்லை. நல்ல ஆசாரிகளிடம் கொடுத்து முறையாக பாக்ஸ் அடிச்சு அசம்பில் பிட் செய்வோம். அப்போதேன் சவுண்ட் ஒதராம இருக்கும். பட்டி தொட்டிலதே ரேடியா செட்டுக்கு நல்ல மவுசு இருக்கும். இப்ப ஆண்ராய்டு காலமாகிட்டதால கொஞ்சம் மதிப்பு குறைஞ்சு போச்சு. அப்பையெல்லாம் விசேஷ வீட்டில் உட்கார்ந்து ரேடியா செட்டு பாட்ட ரசிப்பாங்க இப்ப எல்லாம் போனில் சேட்டிங்கில் பிசியா இருக்காங்க. அதனால நம்மல சிலர் தொல்லையா தான் பாக்குறாங்க" என்றார் லேசான வருத்தத்துடன்.

லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!
 
மதுரை அச்சம்பத்து பகுதியை சேர்ந்த ரேடியோ செட் உரிமையாளர் கருப்பசாமி.., " நாங்க 45 வருடமா செட்டு போடுறோம். உலகப் புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து உள்ளுர் கருமாரியம்மன் கோயில் வரைக்கும் பல இடங்களில் கோயில் செட்டு அதிகமாக போட்டுருக்கோம். அதுபோக கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின்,   வைகோ,  திருமாவளவன், விஜயகாந்த் என ஏகப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நாங்க செட்டு போட்டு இருக்கோம். முக்கியமா மு.க.அழகிரியின் நிறைய பங்சனுக்கும் ரேடியோ செட்டு கட்டி இருக்கோம்.  ஜெயலலிதா அம்மா, அவங்க பங்சன்ல எல்லா விசயங்களையும் கவனிப்பாங்க. ஒரு முறை விழா முடிச்சுட்டு மதுரை ஏர்போர்ட்டுக்கு போகும் போது அம்மா வரவேற்பு பாடல்கள் போட்டோம் 'பூமி உள்ளவரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும்' என்ற பாட்டு போடவும் தொண்டர்கள் பரசவசப்பட்டு ஆரவாரமா கத்துனாங்க அத பார்த்த அம்மா ரேடியா செட்டு ஆப்ரேட்டர்களுக்கு வாழ்த்து சொல்லச் சொல்லி தெரிவிச்ச நிகழ்வு மறக்கமுடியாத ஒன்று.
 
லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!

மதுரையில் பல பெரிய தலைக்கட்டுகளுக்கு செட்டு போட்டிருக்கோம். மதுரைக்கும் ரேடியா செட்டுக்கும் நெருங்கிய பந்தம் இருக்கு. மத்த இடங்களுக்கு அவ்வளவு கெத்து இருக்காது. ஆனா மதுரையில் தொடர்ந்து பெரிய அளவு ஆதரவு கிடைக்கும். அம்மன் டவர், கருப்பசாமி டவர் என்று சீரியல் விளக்கால் அசத்திவிடுவோம்.  அதனால எங்களின் ஒளி, ஒலி அமைப்பு என்றாலே நல்ல மாஸ்  இருக்கு. ஆனா இப்ப கொரோனா டயத்துல ஒரு சின்ன வேலை கிடைக்கிறது கூட கஷ்டமா இருக்கு" என்றார்.
 
லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!
மதுரை வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த கமலம் ரேடியோஸ் லெஷ்மணன்....," இந்த தொழிலில் 20 வருசத்துக்கு மேல இருக்கோம். கமலம் என்பது எங்க குல தெய்வ பெயர் அதனால, நல்ல காரியத்திற்கு மட்டும் தான் செட்டு போடுவோம். விநாயகர் பாடல் இல்லாமல் செட்ட துவக்க மாட்டோம். அதே போல செட்ட அவிழ்க்கும் போதும் சாமி பாடல் தான், போட்டுட்டு  ஆப் செய்வோம். திருவிழாவில் மேள, தாளம் அடிச்சா எப்படி உணர்ச்சி பொங்குமோ அந்த அளவிற்கு எங்க செட்டையும் தயார் செய்து வைத்திருப்போம். நல்ல பாடல்கள்களை தேர்வு செய்து கலந்து கட்டி அடிப்போம். இதனால் சாமி வராத மனுசனுக்கு கூட சாமி வந்துவிடும். நேர்மையாக செட்டு போடுவதால் எங்கள் பகுதி மக்களிடம் பெரிய ஆதரவு இருக்கும்" என்றார்.

லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!
 
அலங்காநல்லூர் திருமலை ரேடியோஸ் உரிமையாளர் கோகுல் ராம்...," அப்பா காலத்தில் இருந்து செட்டு போடுவது தான் எங்க தொழில். நான் பிளஸ்டூக்கு பின்னாடி ரேடியா செட்டு தான் கட்டுனேன். இப்ப தொழிலை விரிவு செய்து பாத்திர செட், டேபிள் சேர்னு  விசேஷத்திற்கு தேவையான பொருட்களை வழங்குகிறோம். ஒருங்கிணைந்த தொழிலாக செய்யவும் நல்ல வருமானம் கிடைக்கிறது. என்ன தான் பல தொழில்களை ஈடுபடுத்திக்கிட்டாலும். ரேடியா செட்டு தான் எங்களுக்கு முக்கியம். அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் 5 நாட்கள் திருவிழாவில் நாங்க தான் அதிகமாக செட்டு போட்ருக்கோம். 150 ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை செட்டு கட்டிவிட்டோம். காலத்திற்கு தகுந்தவாரு. செட்டுகளை அப்டேட் பண்றோம். இளைஞர்கள் பாடலின் கம்மிங் வரைக்கும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதனால தரமாக செட்டு போட்டா மட்டும் தான் நிலைத்து நிற்க முடியும். கிருஷ்ண ஜெயந்தி வந்துட்டா எப்போதும் பிசியா தான் இருப்பேன். கண்ணன் பாடல்கள் நம்மிடம் நிறைய சேகரிப்பு இருக்கு அதனால முதுகுளத்தூர் வரை செட்டு போட்டு வந்துருக்கேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் செட்டு போட்ருக்கோம். காளைகள பெருமைப்படுத்தும் பாடல்கள் நிறைய போடுவோம் முரட்டுக்காளை, விருமாண்டி பாடல்களை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிகமாக ரசிப்பார்கள் என்பதால் அதனை அடிக்கடி போடுவோம்," என்றார்.

லாக்டவுன் ஸ்டோரிஸ்: ரேடியா செட் ஆபரேட்டருக்கு வாழ்த்து சொன்ன ஜெயலலிதா! மதுரையை குலுக்கிய குழாய் மன்னர்கள்!
 
மேலூர் பிரகாஷ் ரேடியோஸ் உரிமையாளர் டேவிட்....," மதுரையில் மதினா, திருப்பதி, வாசுகி,  சுந்தரம் போன்ற ரேடியா செட் கம்பெனிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ரேடியா செட் வச்ச காலத்தில் சிறிய அளவில் தான் ஆரம்பித்தேன். தற்போது பல இடங்களில் கோயில் திருவிழா காண்ரெக்டுகள் கிடைக்கிறது. மேலூர் நாகம்மாள் கோயில் திருவிழா தான் மிகப்பெரும் திருவிழா. மேலூர் தாலுகாவே ஒன்று கூடும். இதில் வேறு நிறுவனங்களுடன் இணைந்து செட்டு போடும் அளவிற்கு என்னுடைய வளர்ச்சி உயர்ந்துள்ளது. கல்யாணம் காதுகுத்து விழாக்களில் எங்க செட்டு  அதிகமா விரும்பப்படுது. ஆனா கொரோனா லாக்டவுன்ல எங்க வாழ்வாதாரத்த இழந்து நிக்கிறோம் அரசு தான் எங்களுக்கு உதவி செய்யனும்" என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget