மதுரையில் நாளை எங்கெல்லாம் (19-12-24) மின்தடை... லிஸ்ட்ட பாருங்க !
Madurai Power Shutdown: 19.12.2024 மதுரையில் பல்வேறு பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.
Madurai Power Shutdown: 19.12.2024 மாதாந்திர பராபரிப்பு காரணமாக நாளை மதுரையில் பல்வேறு பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தனியாமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ளார்.