மேலும் அறிய
மதுரை மக்களே அலர்ட்... நாளை போக்குவரத்து மாற்றம் - முழு விபரம் இதோ
10ஆம் தேதி மதுரையிலிருந்து அழகர்கோவில் சாலை வழியாக மேலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் கள்ளந்திரி, லெட்சுமிபுரம், மாங்குளம், கிடாரிபட்டி வழியாக மேலூர் செல்ல வேண்டும்

போக்குவரத்து மாற்றம்
மதுரை நோக்கி அழகர்
சித்திரைத் திருவிழா நடைபெற்றும் வரும் சூழலில் 10-ம் தேதி கள்ளழகர் மலையை விட்டு மதுரை மாநகர் நோக்கி கிளிம்புகிறார். இந்த சூழலில் இது தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தும் இடம்
மதுரையிலிருந்து அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல் மற்றும் அப்பன்திருப்பதி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் 10-ஆம் தேதி மதுரை அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அம்புவிடும் மண்டபம் - பைக்குகள் நிறுத்துமிடம் பாலாஜி அவன்யூ - தற்காலிக பேருந்து நிறுத்தம் மற்றும் 4 சக்கர வாகனங்கள், கேரளா நீட் அகாடமி - நான்கு சக்கர வாகனம், மாங்காய் தோட்டம்- டாடா ஏஸ் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், மா.சத்திரப்பட்டி சந்திப்பு -காயில் கம்பெனி நான்கு சக்கர வாகனம் பொய்கைகரைப்பட்டி தெப்பம் - இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம். மேலூரிலிருந்து அழகர் கோவில் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் 10.05.2025-ஆம் தேதி மேலூர் அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை
ஐஸ்வர்யா கார்டன் - நான்கு நிறுத்துமிடம் சக்கர வாகனம், முத்துலெட்சுமி ரைஸ்மில் பார்க்கிங் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், பிரகாஷ் அய்யர் கார்டன் (மகாத்மா மாண்டிசோரி பள்ளி சந்திப்பு ) - இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம், அம்மன் மகால் அருகே இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம், கோட்டை இரண்டாவது நுழைவு வாயில்- தற்காலிக பேருந்து நிறுத்துமிடம், 10-ஆம் தேதி மேலூரிலிருந்து அழகர்கோவிலுக்கு வரும் அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் பிற்பகல் 1 மணி வரை அழகர்கோயில் வளாகம் வரை வந்து செல்லலாம், மதுரையிலிருந்து கடச்சனேந்தல் வழியாக அழகர்கோவில் செல்லும் ரோடு, மேலூரிலிருந்து கிடாரிப்பட்டி வழியாக அழகர்கோவில் செல்லும் ரோடு மற்றும் மதுரை-நத்தம் சாலையிலிருந்து சீகுபட்டி சந்திப்பு வழியாக அழகர்கோவில் செல்லும் ரோடு ஆகிய வழித்தடங்களில் 10ஆம் தேதி காலை முதல் எவ்வித கனரக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















