மேலும் அறிய

மதுரை : யாக குண்டத்தில் கொரோனா பொம்மையை போட்டுப் பொசுக்கி வழிபட்ட பக்தர்கள்

கொரானா தொற்றை ஒழிக்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது. வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கொரானா பொம்மையை யாக குண்டத்தில் போட்டு பொசுக்கி மதுரையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கொரோனா பொம்மையை யாக குண்டத்தில் பொசுக்கி மதுரையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

மதுரை : யாக குண்டத்தில் கொரோனா பொம்மையை போட்டுப் பொசுக்கி வழிபட்ட பக்தர்கள்
 
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு  எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அசாதாரண சூழலில் இத்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.
மதுரை : யாக குண்டத்தில் கொரோனா பொம்மையை போட்டுப் பொசுக்கி வழிபட்ட பக்தர்கள்
 
தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்படியான சூழலில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.  நோய் தடுப்பு பணி, ஆய்வுப் பணி, நோய் கட்டுப்பாட்டு பணி என பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்துவரும் நிலையில் மதுரையில் கொரோனா கட்டுப்பாட்டிற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.
மதுரை : யாக குண்டத்தில் கொரோனா பொம்மையை போட்டுப் பொசுக்கி வழிபட்ட பக்தர்கள்
 
மதுரை மாசி வீதிகளில் ஒன்றான தெற்குமாசி பகுதியில் உள்ள ஸ்ரீ திரெளபதியம்மன் கோயிலில் கொரானா வைரஸ் அழியவும், உலக மக்கள் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியாக, நன்மையோடு வாழ வேண்டி கோயில் பூசாரிகள், சிறப்பு யாகம் செய்தி வழிபாடு நடத்தினர். தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டு ஹோம குண்டத்தில் வேத மந்திரங்கள் சொல்லி அக்னி வளர்க்கப்பட்டது. வளர்க்கப்பட்ட அக்னியில் கொரானா வைரஸ் போன்ற உருவ பொம்மை ஒன்றை உருவாக்கி அதனை ஹோம குண்டத்தில் போட்டு அர்ச்சகர்கள் யாகம் வளர்த்தனர். தொடர்ந்து திரெளபதியம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். இந்த யாக பூஜையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த யாக பூஜையில் ஐந்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : யாக குண்டத்தில் கொரோனா பொம்மையை போட்டுப் பொசுக்கி வழிபட்ட பக்தர்கள்
 
ஆன்மீக பணியில் ஈடுபடும் உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து பேசியபோது, " கொரோனாவை ஒழிக்க முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். ஒரு பக்கம் தடுப்பூசி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவகிறது. இவ்வாறான சூழலில் மன தைரியம் மற்றும் பாசிட்டிவ் வைப்பிரேஷன் ஏற்பட வேண்டுதல்களும் அவசியம்தான். ஆனால் கூட்டமாக குவிந்தோ நோய் தொற்றும் பரவும் வகையிலோ எந்த செயலும் செய்துவிடக்கூடாது" என்று தெரிவித்தார்.
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
kodaikanal : சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 5 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்!
kodaikanal : சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 5 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்!
பழனி நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!
பழனி நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!
பழனி கோயில் பிரசாதம்: நவம்பர் 1 முதல் புதிய விலை! பக்தர்களே தெரிந்துகொள்ளுங்கள்..
பழனி கோயில் பிரசாதம்: நவம்பர் 1 முதல் புதிய விலை! பக்தர்களே தெரிந்துகொள்ளுங்கள்..

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Embed widget