மேலும் அறிய
முருக பக்தர்கள் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரம் - பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் காவல்துறையினர் குவிப்பு !
முருகனின் அறுபடை வீடுகளில் உள்ள மாதிரி முருகன் சிலைகள் மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டுள்ளதால் அருட்காட்சியில் இன்று சாமி தரிசனம் இல்லை.

முருக பக்தர்கள் மாநாடு
Source : whats app
சிறப்பு அழைப்பாளராக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்பு - 15 நாட்கள் விரதம் மேற்கொண்டு மாநாட்டில் பங்கேற்கிறார்.
மதுரையில் இந்து முன்னணியின் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது.
மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திடலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கப்பட்ட அறுபடை அருட்காட்சி எனும், முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் மாநாடு இன்று நடைபெறும் சூழலில் முருகனின் அறுபடை அருட்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் உள்ள மாதிரி முருகன் சிலைகள் மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டுள்ளதால் அருட்காட்சி கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி அமைச்சர்கள், பாஜக முக்கிய நிர்வாகிகள், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இது சமயம் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், சுதாகர் ரெட்டி, மற்றும் மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
இரண்டு கட்ட பாதுகாப்பு
முருக பக்தர்கள் ஆன்மீக மாநாட்டையொட்டி மாநகர காவல் ஆணையர் லோக நாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முருக பக்தர்கள் மாநாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பங்கேற்க வாகனங்களில் வருவதால், அவர்களுக்கு வசதியாகவும், பொதுமக்கள் இடையூன்றி செல்வதற்கும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்த்தொட்டிகள், 100க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், உடனடி சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்ட பாதுகாப்பிற்கு பின் மாநாட்டிற்கு வரும் நபர்கள் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















